இனி டெல்லி முழு கண்ட்ரோல்.. அரசியல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு போகும் விஜய்.. கரூர் கேஸால் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசியலில் புதிய கூட்டணி அமைக்கும் சாத்தியக்கூறுகளை பாஜக ஆராய்ந்து வருகிறது. கரூர் விவகாரத்தில் விஜயை நேரடியாக கடுமையாக தாக்காமல் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது. அதே சமயம் திமுக தரப்பையும் ஆளும் கட்சி என்பதால் பாஜக தாக்கி வருகிறது.

TVK Vijay

தமிழ்நாட்டில் தனது கால்தடத்தை வலுப்படுத்தும் நோக்கில், பாஜக அண்மையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. கடைசியாக டெல்லியில் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. விரைவில் இடப்பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

பாஜக அதிமுக - தவெக கூட்டணி

இப்படிப்பட்ட நேரத்தில்தான் விஜய் - அதிமுக இடையே கூட்டணி அமைவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. அதாவது பாஜக கூட்டணியில் அதிமுக, தவெக இரண்டும் இருக்கும். பாஜக 40 இடங்கள், தவெக 50 இடங்கள் மீதம் உள்ள இடங்களில் அதிமுக போட்டியிடும். விஜய் துணை முதல்வராக முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

சிபிஐ விசாரணை

இப்படிப்பட்ட நிலையில்தான் கரூர் வழக்கு சிபிஐ விசாரணைக்கு கீழ் சென்றது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிமுக மற்றும் பாஜகவுடன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வரும் நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நீதிபதிகள் ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு மனுக்களை விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

விஜய் எடப்பாடி பேச்சு

இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.

ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+