தப்பிக்க முடியாது..சாட்சி To சந்தேக நபர்! சிபிஐ ஸ்கெட்சில் விஜய்.. ஒரே வார்த்தை பதிலால் வந்த சிக்கல்
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் நடிகர் விஜய், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேற்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையின் போது அதிகாரிகள் எழுப்பிய பல கேள்விகளுக்கு, விஜய் "தெரியாது" என்றே பதிலளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கரூர் சம்பவத்தில் சாட்சியாக இருந்த விஜய், சந்தேக நபராக மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
2025 செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுவரை தமிழகத்தில் இதுபோன்ற அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இல்லாத நிலையில், இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை முதலில் தமிழ்நாடு காவல்துறையின் எஸ்ஐடி விசாரித்து வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிஐ கடந்த சில மாதங்களாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

விஜய் சிபிஐ விசாரணை
கடந்த ஜனவரி 29, 30, 31 ஆகிய மூன்று நாட்களில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் டெல்லியில் வைத்து சுமார் 19.30 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் சிபிஐ வாக்குமூலம் பெற்றது. இந்த விசாரணைகளுக்குப் பிறகு, வழக்கின் அடுத்த கட்டமாக தவெக தலைவர் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது.
சிபிஐ சம்மன்
அதன்படி, 2026 ஜனவரி 6-ஆம் தேதி அவருக்கு எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் வெளியானதும், விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராவாரா, அல்லது நீதிமன்றத்தை நாடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விஜய் நீதிமன்றத்தை நாடாமல், பொங்கலுக்கு முன் ஒருமுறை மற்றும் நேற்று இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜரானார். விசாரணையின் போது அதிகாரிகள் எழுப்பிய சுமார் 100 கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்கு, "எனக்கு தெரியாது" என்றே விஜய் பதிலளித்ததாக கூறப்படுகிறது.
தெரியாது என பதில்
"கரூர் சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக நினைக்கிறீர்களா?" என்ற கேள்விக்கு, சிலர் மீது சந்தேகம் இருப்பதாக விஜய் கூறியதாகவும், அந்த சந்தேகத்துக்குரிய நபர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. "கூட்டத்துக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்?" என்ற கேள்விக்கு, "குறிப்பிட்ட நேரத்துக்குள் அங்கு சென்றுவிட்டேன்" என பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, "பகல் 12 மணிக்குள் விஜய் கரூருக்கு வருவார் என உங்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டது ஏன்?" என்ற கேள்விக்கு, "அது குறித்து எனக்கு தெரியாது" என கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜய் விளக்கம்
மேலும், "நீங்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது குறித்தும், கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையும் போலீஸ் தரப்பில் உங்களிடம் தெரிவித்தார்களா?" என்ற கேள்விக்கும், விஜய் "தெரியாது" என பதிலளித்ததாக கூறப்படுகிறது. "கூட்டத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது மனிதாபிமானமான செயலா?" என்ற கேள்விக்கு, "அசம்பாவிதம் ஏற்படலாம்; உடனே இடத்தை விட்டு செல்லுங்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. அதன் அடிப்படையில்தான் அங்கிருந்து புறப்பட்டேன்" என விஜய் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிபிஐ அதிகாரிகள்
இந்த நிலையில், விசாரணையில் திருப்தியடையாத சிபிஐ அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோரை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், விஜய் அளித்த பதில்களின் அடிப்படையில், தற்போது சாட்சியாக உள்ள அவரை, குற்றப்பத்திரிகையில் சந்தேக நபராக சேர்க்கும் வாய்ப்பும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
BNSS 179 பிரிவு
முன்னதாக, சிபிஐ அனுப்பிய சம்மனில் குறிப்பிடப்பட்ட BNSS 179 சட்டப்பிரிவு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பிரிவின் கீழ் ஒருவர் குற்றவாளியாக அல்ல, சம்பவம் தொடர்பான தகவல்களை அறிந்திருக்கக் கூடிய சாட்சியாக மட்டுமே விசாரிக்கப்படுகிறார். சட்ட ரீதியாக தற்போது விஜய் குற்றவாளி அல்ல. ஆனால், விசாரணை போக்கை பொருத்து அவரது நிலை மாற்றப்படுமா என்பதே தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications