சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது.. மாணவிகளே அதிகம் தேர்ச்சி.. ரிசல்ட் பார்ப்பது எப்படி?
சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொத்தம் 88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. பல்வேறு மாநிலங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் தற்போது வரை வெளியாகவில்லை. இதனால், சிபிஎஸ்இ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 2025ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு இந்தியா மற்றும் 26 நாடுகளில் 7,842 தேர்வு மையங்களில் 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 18 வரை நடைபெற்றன.
இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் +2 தேர்வு முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகளே அதிகம் தேர்ச்சி
* நடப்பு ஆண்டில் சென்னை மண்டலத்தில் 97.39 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* விஜயவாடாவில் 99.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் 79.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* நடப்பு ஆண்டிலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* மாணவர்களை விட 5.94 சதவீதம் மாணவிகள் கூடுதல் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in., results.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் பத்தாம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்பு ரிசல்ட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
எப்படி பார்ப்பது?
தேர்வு எண்ணையும் பிறந்த தேதியைும் கொண்டு லாகின் செய்தால் முடிவுகள் தெரியும். பின்னர் இதை அப்படியே டிஜிலாக்கர் கொண்டு டவுன்லோடு செய்து கொள்ளலாம். Digilockerல் போய் தேர்வு முடிவுகளை பார்க்க உரிய லாகின் தகவல்கள் ஏற்கனவே சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக திருவனந்தபுரம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டு 99.91 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டும் திருவனந்தபுரமே முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த இடங்களில் விஜயவாடா, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
மாணவர்கள் ரோல் நம்பர், பள்ளி எண், பிறந்த தேதி, ஹால் டிக்கெட் மற்றும் டிஜி லாக்கர் பின் ஆகியவற்றை பயன்படுத்தி மார்க்ஷீட் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் டிஜிலாக்கர் (DigiLocker) செயலி மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் தங்களது டிஜிட்டல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன், எஸ்எம்எஸ் (SMS) மூலமாகவும் முடிவுகளை தெரிந்துகொள்ளும் வசதி வழங்கப்படலாம்.
-
"வெறும் 2 நிமிடங்களில் 15 லட்சம் சைபர் தாக்குதல்.." CBSE போர்ட்டலை மொத்தமாக முடக்க முயற்சி! பகீர் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications