CBSE Class 10 Exam: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான 2ஆம் கட்ட தேர்வு எப்போது? அட்டவணை இதோ!
சென்னை: சிபிஎஸ்இ நடத்தும் 10ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தேர்வை எழுத 6.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புவோர் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வுக்கான அட்டவணையையும் பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் மார்ச் 11-ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வில் 25,08,319 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 14,08,546 மாணவர்களும், 10,99,773 மாணவிகளும் அடங்குவர். நாடு முழுவதும் 8,075 தேர்வு மையங்களில் 83 பாடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதன் முதல் கட்ட தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டு 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 94.99 சதவீதமும் மாணவர்கள் 92.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் வாரிய தேர்வு விருப்பத் தேர்வாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேர்வு மே 15 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறும்.
பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நடத்தப்படும் இந்த தேர்வில் அதிகபட்சமாக 3 பாடங்களில் மதிப்பெண் மேம்பாட்டிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். முதல் தேர்வில் இரு பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் கம்பார்ட்மென்ட் பிரிவில் வைக்கப்பட்டு அவர்கள் இந்த இரண்டாவது தேர்வில் பங்கேற்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
ஆனால் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த அல்லது தேர்வுக்கு வராத மாணவர்கள் இரண்டாவது தேர்வை எழுத முடியாது. அவர்கள் 2027 ஆம் ஆண்டு நடக்கும் முதன்மைத் தேர்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.
அந்த வகையில் இரண்டாம் கட்ட தேர்வு எழுத சிபிஎஸ்இ விண்ணப்பங்களை வரவேற்றது. அதில் 6.68 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்பும் பிரிவில் 5.25 லட்சம் மாணவர்களும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்து மறுதேர்வு எழுதும் பிரிவில் 85.285 மாணவர்களும், தேர்ச்சியடையாத மற்றும் அதிக மதிப்பெண்கள் என இரு பிரிவுகளிலும் தேர்வு எழுதுவோர் என்ற பிரிவில் 57,914 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் நலன் கருதி நிகழாண்டு முதல் ஆண்டுக்கு இரு முறை சிபிஎஸ்இ, தேர்வை நடத்துகிறது. முதல் கட்ட பொதுத் தேர்வு கடந்த பிப்ரவரியில் நடந்தது. இந்த இரண்டாம் கட்ட தேர்வுகள் மே 15 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அதிகபட்சம் 3 பாடங்கள் வரை மாணவர்கள் தேர்வெழுதி மதிப்பெண்ணை உயர்த்திக் கொள்ளலாம்.
தேர்வு அட்டவணை
மே 15- கணிதம்
மே 16- ஆங்கிலம்
மே 18- அறிவியல்
மே 19- விருப்பப் பாடம் (தமிழ், உருது, இந்தி, பஞ்சாபி, மராத்தி, வெளிநாட்டு மொழிகள்)
மே 20- சமஸ்கிருதம், ஓவியம், தகவல் தொழில்நுட்பம்
மே 21- சமூக அறிவியல்
இந்த தேர்வுகளுக்கு ஒரு பாடத்திற்கு ரூ 320 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். 3 பாடங்களுக்கு ரூ 960-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். இதை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.
-
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி!












Click it and Unblock the Notifications