• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்.. மசூதிகளில் சிறப்பு தொழுகை.. தலைவர்கள் வாழ்த்து

Google Oneindia Tamil News

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. . பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இன்று காலை பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும்.

அதன்படி, இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பை கடந்த ரமலான் மாதத்தில் கடைபிடித்து வந்தனர். 30-வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி, 30-வது நாளான இன்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது.

 லவுட் ஸ்பீக்கர் ஒரு சமூக சிக்கல்..ரம்ஜான் பண்டிகையை தடுக்காதீங்க.. ஆரத்திக்கும் ராஜ்தாக்கரே தடை லவுட் ஸ்பீக்கர் ஒரு சமூக சிக்கல்..ரம்ஜான் பண்டிகையை தடுக்காதீங்க.. ஆரத்திக்கும் ராஜ்தாக்கரே தடை

கோலாகலம்

கோலாகலம்

இதையடுத்து நேற்று மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை தொடர்ந்து, இன்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின்தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் அறிவித்தார்.. இதனைத் தொடர்ந்து, ரமலான் மாதத்தில் நோன்பிருந்து கடமையாற்றிய இஸ்லாமியர்கள் நோன்பு முடித்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இன்று காலைபெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் விடிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து இறைவனை தொழுதனர்.. புத்தாடை அணிந்து உற்றார், உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இன்று மசூதிகளில் இஸ்லாமியர்களின் கூட்டம் அலைமோதுகிறது.. தொழுகைக்கு பிறகு, தங்களது நண்பர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ரம்ஜான்

ரம்ஜான்

அதேபோல, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும், தங்களது இஸ்லாமிய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை நேரடியாக சென்றும், போன் மூலமாக அழைத்தும் தெரிவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தொழுகை

தொழுகை

அதன்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டதையடுத்து, தொழுகை சிறப்பாக நடந்தது.. ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்டோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 குடியரசு தலைவர்

குடியரசு தலைவர்

அதில், "இந்த புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து சிறப்பு வழிபாடு நடத்துகிறார்கள். ரமலான் மாத நிறைவில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது, ஏழைகளுக்கு உணவு மற்றும் உணவு தானியம் வழங்குவதும் சிறப்பு அம்சமாக உள்ளது. இந்த விழா இணக்கமான, அமைதியான, வளமான, சமூகத்தைக் கட்டமைப்பதற்கு பாடுபட மக்களை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. புனிதமான ரம்ஜான் பண்டிகையின்போது மனித குலத்திற்கு சேவை செய்வதற்கும் ஏழைகள் மற்றும் நலிந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நம்மை அர்ப்பணிக்க உறுதியேற்போம்" என்றார்.

 மோடி ட்வீட்

மோடி ட்வீட்

பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் வாழ்த்து பதிவில், இந்த பண்டிகை நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் உணர்வை மேம்படுத்தும் என்று நம்புகிறேன். அனைவரும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் ஆசீர்வதிக்கப்படட்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

  சென்னை: ரம்ஜான் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்... பள்ளி வாசல்களில் கூட்டு சிறப்பு தொழுகை!
  கருணாநிதி

  கருணாநிதி

  தமிழக முதல்வர் வாழ்த்து செய்தியில், இஸ்லாமியர்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும்இயக்கம் திராவிட இயக்கம். எண்ணற்ற நலத்திட்டங்களை, திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினார். பெரும்பான்மைவாதமும், மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்துநிற்கும் ‘திராவிட மாடல்' ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான், தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு என் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

  English summary
  Celebration of ramadan today and governor, chief minister, political parties leaders greets இன்று ரம்ஜான் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X