அடடே வாங்க வாங்க! களைகட்டிய ஜெகத்ரட்சகன் இல்ல விழா! ஆஜரான உதயநிதி, ராமதாஸ்! சர்ப்ரைஸ் தந்த சந்தானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்ல விழாவில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திமுக முன்னணி தலைவர்களில் ஒருவரும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அரக்கோணம் தொகுதியில் நீண்ட வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன்

அதிமுகவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய ஜெகத்ரட்சகன் அதன் பின்னர் திமுகவில் இணைந்தார். 1999 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின்னர் 2004 ஆம் ஆண்டு வீர வன்னியர் பேரவை என்ற கட்சியை தொடங்கினார். அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் அந்த கட்சியை நடத்தி வந்த ஜெகத்ரட்சகன் 2009 ஆம் ஆண்டில் அந்த கட்சியை திமுகவுடன் இணைத்தார்.

திருமண நிகழ்ச்சி

திருமண நிகழ்ச்சி

தொடர்ந்து திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் இருந்த போது வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார். தற்போதைக்கு திமுகவில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் எழுத்தாளராகவும் அறியப்படுகிறார். இந்நிலையில் அவரது இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே சீர்காழி கடலூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகளை பார்வையிட முதல்வர் ஸ்டாலின் சென்று விட்டதால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலவில்லை.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சி நிர்வாகியான ஏகே மூர்த்தி, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதேபோல அமைச்சர் துரைமுருகன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

இதேபோல பிரபல நடிகர் சந்தானமும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண மேடையில் ஜெகத்ரட்சகனோடு உற்சாகமாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த சந்தானம் அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உதயநிதி, ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் சந்தானம் உள்ளிட்டோர் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+