சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தேவா - சூப்பர் ஸ்டாருக்கு மம்முட்டி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைவா என தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, தமிழின் ஐகானிக் திரைப்படங்களில் ஒன்றான தளபதி படத்தில் அவருடன் இணைந்து நடித்த மலையாள திரையுலகின் உச்சநடிகரான மம்முட்டி தளபதி படத்தின் ஸ்டில்லுடன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil

    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை அவரின் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்திக் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூற நேற்று இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர்.

    சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டனில் நள்ளிரவில் ரசிகர்கள் சிலர் கேக் வெட்டி பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளனர். இது தவிர தற்போது அவரை பார்ப்பதற்காக தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள் அவரது இல்லத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தொடர்ந்து பலரது அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கும் அவருக்கு வாழ்த்துகள் குவிகிறது.

    நடிகர் மம்முட்டி வாழ்த்து

    நடிகர் மம்முட்டி வாழ்த்து

    இந்த நிலையில் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் மம்முட்டி தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டான தளபதி படத்தில் காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாடலின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்லை வெளியிட்டு அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்து அன்பு ரஜினி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பாஜக அண்ணாமலை வாழ்த்து

    பாஜக அண்ணாமலை வாழ்த்து

    முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று பிறந்தநாள் கொண்டாடும் தாதாசாகெப் பால்கே, சூப்பர் ஸ்டார் ஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் ,அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன், மகாவதார் பாபாஜியின் கருணையும் அருளும் என்றும் கிடைக்கட்டும்!.. என குறிப்பிட்டுள்ளார்.

    ராகவாலாரன்ஸ்

    ராகவாலாரன்ஸ்

    இதேபோல் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரும், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல பரிணாமங்களை வெளிப்படுத்தி வரும் , ராகவ லாரன்ஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் நடிகர் ரஜிகாந்துடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    நடிகை ரோகினி வாழ்த்து

    நடிகை ரோகினி வாழ்த்து

    நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மறக்க முடியாத தெறி ஹிட் படமான பாட்ஷா படத்தில் வில்லான நடித்தவர் ரகுவரன். ரஜினிக்கும் நிகராக அவரது நடிப்பு தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அவர் இல்லாமல் பாட்ஷா படமே இல்லை எனவும் பலர் சிலாகித்து கூறி வருகின்றனர். அவர் மறைந்த நிலையில் அவரது மனைவியும் நடிகையுமான ரோகிணி, தனது மகனுடன் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படத்துடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+