தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகுது.. சத்தமில்லாமல் நடக்கும் சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகள் (CCB) கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் வகையில் மொபைல் பேங்கிங் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகளுடன் மேம்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டு முயற்சியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிதாம்.
இந்தியா முழுவதுமே கூட்டுறவு வங்கிகள் பல்வேறு வகையில் சாமானிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகின்றன. குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்குவது, பயிர் கடன் வழங்குவது போன்ற சேவைகளை செய்து வருகின்றன. கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கான மக்கள் வங்கி சேவையை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் மொபைல்பேங்கிங் மற்றும் இதர டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் ஆகப்போகிறது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை போல் இந்த வங்கிளிலும் பல்வேறு சேவைகள் கொண்டுவரப்பட உள்ளன,.
இது தொர்பாக கூட்டுறவு வங்கி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் உள்ள 23 மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்த முடியும். இதனால் இனி வங்கிகளுக்கு இடையேயான பியர் டு பியர் (P2P) மற்றும் நபர் முதல் வணிகர் (P2M) பரிவர்த்தனைகளையும் மொபைல் மூலமாகவே மேற்கொள்ள முடியும். பண பரிவர்த்தனையை உடனடியாக முடிக்க முடியும் என்பதால், இரண்டு கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை இது மிகவும் எளிதாக்கிவிடும்.
இந்த புதிய திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகள், வங்கிகளுக்கு போக வேண்டிய அவசியமே இல்லை. அவங்களோட ஸ்மார்ட் போன்கள் மூலம் உடனடியாக கணக்குகளை கையாளலாம். பணத்தை ஒரு கணக்கில் இருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்ற முடியும்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கோர் பேங்கிங் வசதிகளுக்குப் பிறகு கூட்டுறவு வங்கிகள் வேகமாக முன்னேறி வருகின்றன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக வங்கிக் கணக்குகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை கூட்டுறவு வங்கிகளில் உருவாகப்போவதால், கிராமப்புற விவசாயிகளுக்கு மிகப்பெரிய நன்மையாக இருக்கும்" என்றார்.
அதேநேரம் கிராமப்புறங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் தான் (பிஏசிசிஎஸ்) பருவகால பயிர்க் கடன்களை விவசாயிகள் பெற்று வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டில் உள்ள 4,532 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை (பிஏசிபி) இணைக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஜிட்டல் வங்கி சேவைகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், டிஜிட்டல் சேவை திட்டம் முடிந்தவுடன்,அப்டேட்டான அதேநேரம் வேகமான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகளை வழங்குவதில் முறைகேடுகள் பெரிய அளவில் குறையும் என்று கூறினார்கள்.
2516 கோடி மதிப்பீட்டில் 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 63,000 PACCS களை உள்ளடக்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை (PACCS) கணினிமயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த திட்டத்தின்படியே தமிழ்நாட்டில் இந்த மாற்றம் நடக்கிறது. தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.124.9 கோடி வழங்கப்பட உள்ளது. இதில் தமிழ்நாடு அரசின் பங்கு ரூ.56.02 கோடியாக இருக்கும். மத்திய அரசின் பங்கு ரூ.84.04 கோடியாகும். அண்மையில் தான் இந்த நிதியை மத்திய அரசு விடுவித்தது.












Click it and Unblock the Notifications