நீங்க மத்திய அரசு ஊழியரா.. இதோ ஸ்பெஷல் செய்தி வந்தாச்சு.. அதுவும் 42 நாட்களாமே.. என்னன்னு பாருங்க
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய பணியாளர் அமைச்சகம் விடுமுறை நாட்களை அதிகரித்து அறிவித்துள்ளது.

மனிதன் செய்யும் தானங்களிலேயே முதன்மையானது, ரத்த தானம், கண்தானம் உட்பட உடல் உறுப்பு தானம் ஆகும்.. நம் உடலில் உள்ள உறுப்புகளை நம் காலத்துக்கு பிறகு, மற்றவர்களுடைய பயன்பாட்டுக்காக தானமாக வழங்குவதே, உடல் உறுப்பு தானம் எனப்படும்.
உடல்தானங்கள்: உடல் தானம் வழங்குபவர்கள், மருத்துவ படிப்பு மாணவர்களுக்குத்தான் தங்கள் உடல்களைத் தானமாக வழங்குகிறார்கள்.. அதேபோல, மூளைச் சாவு அடைந்திருந்தால் மட்டுமே இதயம், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியும்.. இயற்கை மரணமடைந்தால் கண் தானம் செய்யலாம்... மற்றபடி, முக்கிய உறுப்புகளை தானம் செய்ய முடியாது.
அந்தவகையில், உலகில் உறுப்பு தானத்தின் தேவை எப்போதுமே அதிகமாகவே இருந்து வருகிறது.. ஆனால், ஒவ்வோர் வருடமும், உறுப்பு கிடைக்காததால் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேர் இறந்து போவதாக சொல்கிறார்கள்.. பழைய நம்பிக்கைகள் மற்றும் தவறான எண்ணங்கள் காரணமாக உறுப்பு தானம் செய்வதில் மக்களுக்கு ஒருவித தயக்கம் இருப்பதும் இந்த பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்து விடுகிறது..
விழிப்புணர்வுகள்: இதற்காகவே, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வுகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது... மேலும், உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிக்கவும், அவர்களை பாராட்டும் வகையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் தியாக உணர்வு சிறப்பிக்கப்படுகிறது..
அரசு ஊழியர்கள் உடல் உறுப்பு தானம் செய்தால் அவர்களுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. ஆனால் உடல் உறுப்பு மாற்றத்திற்கான அறுவை சிகிச்சை என்பது குணமடைய நீண்ட நாள் ஓய்வு தேவை என்று மருத்துவ வல்லுநர்கள் குழு ஆலோசனை அளித்துள்ளனர்.. இதையடுத்து, மத்திய அரசு ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, இனி உடல் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
42 நாட்கள்: இது குறித்து மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சிதுறை பிறப்பித்த உத்தரவில் சொல்லியிருப்பதாவது: உறுப்பு தானம் மிகப் பெரிய அறுவை சிகிச்சை. இதில் இருந்து குணமடைய அதிக காலம் ஓய்வு தேவைப்படுகிறது. உறுப்பு தானம் செய்வது மிகவும் உன்னதமான செயல். இதை மத்திய அரசு ஊழியர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. இந்த சிறப்பு விடுப்பு இப்போது 30 நாட்களாக உள்ளது.
அரசு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உறுப்பு தானம் செய்யும் மத்திய அரசு ஊழியருக்கு இனி அதிகபட்சம் 42 நாட்கள் சிறப்பு விடுப்பு அளிக்கப்படும். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994-க்கு ஏற்றவகையில் இருக்க வேண்டும். இந்த சிறப்பு விடுப்பு, இதர விடுப்புகளுடன் இணைக்கப்படாது.. உறுப்பு தானத்துக்கான சிகிச்சையை, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால், சம்பந்தப்பட்ட துறைதலைவரின் சான்றிதழை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications