ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.. ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குட்நியூஸ்
சென்னை: ஆயுஷ்மான் ரேஷன் கார்டுதாரர்கள் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் 5லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசு இலவசமாக வழங்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டம் வாயிலாக மக்கள் ரூ.5 லட்சம் வரை பயன்பெற முடியும். இந்த திட்டத்தை அரசு தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இந்தியாவில் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு ஆயுஷ்மான் அட்டைதாரர்களுக்கான முக்கிய பரிசு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது வரையிலும் பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5லட்சம் வரையிலான இலவச சிகிச்சையினை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசின் இந்த புதிய திட்டம் செப்டம்பர் 17ம் தேதி துவங்கப்பட்டுள்ள நிலையில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரையிலும் இந்த திட்டத்தின் கீழ் 80 கோடி மக்கள் பயனடைந்துள்ள நிலையில் அக்டோபர் 2ஆம் தேதிக்குள் இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுஷ்மான் இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 23, 2018 அன்று பி.எம். ஜான் அரோகியா யோஜனா மருத்துவக் காப்பீடு திட்டத்தை வெளியிட்டார். ஆகஸ்ட் 1, 2023 நிலவரப்படி, மொத்தம் 24.33 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்திய குடும்பத்தினருக்கு வருடத்திற்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீட்டை இந்த திட்டம் உறுதி செய்கிறது. மருத்துவ தேவைகளுக்கு பணமில்லா அணுகலை இந்த திட்டம் வழங்குகிறது. அரசு மற்றும் அரசு சாராத அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டத்தின் வாயிலாகப் பயன்பெறலாம்.
முதல் 3 நாள்களைத் தொடர்ந்து, சிகிச்சை பெறும் அடுத்த 15 நாள்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் தேவைப்படும் மருத்துவ செலவை ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் செலுத்தும். குடும்பத்தின் அளவு, வயது, பாலினம் ஆகியவற்றிற்கு எந்த வரம்பும் இல்லை.
முன்னே கண்டறியப்பட்ட நோய்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
அரசு பட்டியலிட்டுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இந்த இலவச சேவைகள் கிடைக்கும். மருந்துகள், பொருள்கள், கண்டறியும் சேவைகள், மருத்துவரின் கட்டணம், அறை கட்டணங்கள், அறுவை சிகிச்சை கட்டணங்கள், OT, ICU கட்டணங்கள் போன்ற சுமார் 1,929 சேவைகளில் சிகிச்சை தொடர்பான அனைத்து செலவுகளையும் இந்த காப்பீடு திட்டம் பார்த்துக்கொள்ளும்.
அனைத்து பொது மருத்துவமனைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் இந்த திட்டம் நடப்பில் உள்ளது. தகவல்களுக்கு 14555 என்ற இலவச எண்ணை அழைத்து பயனடையலாம். இந்த திட்டத்தை குறித்து கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள https://abdm.gov.in என்ற இணையதளத்தை அணுகவும்.
பயனாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதோடு தொடர்புடைய செலவுகளுக்கு எந்த கட்டணத்தையும், பிரீமியம் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. கூடுதலாக, மருத்துவமனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய செலவுகள் திட்டத்தின் கீழ் வரும் என்பதால், செலவுக்கு அஞ்சாமல் தைரியமாக சிகிச்சைப் பெறலாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications