அரசு ஊழியர்களுக்கு "ஜாக்பாட்" வருது.. ஒரேடியா எகிறும் சம்பளம்.. ஒரே கல்லுல 2 மாங்கா.. வேறலெவல் ப்ளான்
சென்னை: மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று தெரிகிறது.. அந்தவகையில் 8வது ஊதியக்குழு அமலாக வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, அது 2016ல் அமலுக்கு வந்தது. அந்தவகையில், எட்டாவது ஊதிய குழு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனைகள் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.

பரிந்துரைகள்: தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் பலன்களை ஊழியர்கள் பெற்றுவருகிறார்கள்... ஆனாலும், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதைவிட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் சொல்லி வருகிறார்கள்.. எனவேதான், மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக் குழுவை அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8-வது ஊதியக்குழு அமைக்கப்பட்டுவிட்டால், புதிய ஆணையம் பலவேறு மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, 7-வது ஊதியக் குழுவின் கீழ், இப்போது ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது.. அரசு இந்த சம்பளத்திற்கு ஃபிட்மென்ட் காரணியை அமல்படுத்தியது என்றாலும், பலதரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் அதிகரித்தன.. இருப்பினும், ஊழியர்களின் சம்பளத்தை கணக்கிடுவதற்காகவே அரசு இந்த ஃபிட்மென்ட் காரணியை செயல்படுத்தியது.
ஊழியர்கள்: அந்தவகையில், 7-வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 257 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது. இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக உள்ளது.. இனி 8-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால் ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கலாம், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரக்கூடும் என்கிறார்கள்.
இந்த அதிகரிப்பின் மூலம் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போதுவரை 8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் அரசு அறிவிக்கவில்லை.. எப்படியும் வரும் 2024ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.
ஜாக்பாட்: காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வரும் நிலையில், அரசு ஊழியர்களின் மனங்களை மேலும் குளிரவைக்க, 8வது ஓய்வூதிய குழுவை அமைத்து அதிரடியை கிளப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆக, ஒருபக்கம் அடிப்படை சம்பளம் உயரும், மறுபக்கம் பிட்மென்ட் ஃபேக்டர் காரணியும் உயர்த்தப்படும் என்பதால், அரசு ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி உள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications