சம்பள கமிஷனில் தாறுமாறு ஏற்றம்.. அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி.. ஏறுது ஊதிய உயர்வு .. அறிவிப்பு வருது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 8வது ஊதியக்குழுவை விரைவில் அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டு வரும்நிலையில், இதுகுறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு 7வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அது 2016ல் அமலுக்கு வந்தது. எப்போதுமே 10 வருடத்துக்கு ஒருமுறை ஊதியக்குழு மாற்றப்படுவது வழக்கம் என்பதால், 8வது ஊதிய குழு (8th Pay commission) எப்போது அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.

 Central Government Employees Salary Hike and 8th Pay Commission come into effect from 2024 January with 50 % DA

ஊதியக்குழு: 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்று வருவதாகவும், விரைவில் புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசும் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஒருவேளை, புதிய ஊதியக்குழு அமலானால், ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு உயரும், ஊழியர்களின் சம்பளமும் 44.44 சதவீதம் உயரக்கூடும், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயரும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் உள்ளன.

புதிய குழு: புதிய ஊதியக்குழு வந்தால், ஊழியர்களின் ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும் என்ற யூகங்கள் ஏற்கனவே வலம் வந்தபடியே உள்ளன.. 7வது ஊதியக்குழு விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படுமாம்.. பிறகு, அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத DA சேர்க்கப்பட்டு, அகவிலைப்படி கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் என்கிறார்கள்.
கடந்த ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது... எனவே, ஜனவரி 2023-லும் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும்.. அப்படி ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது கட்டாயமாகும்.

பரிசீலனைகள்: இந்நிலையில், 8வது ஊதியக்குழு, பொதுத்தேர்தலுக்கு முன்பேயே நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. காரணம், ஊதியக்குழுவை நியமித்தால், அதை அமல்படுத்துவதற்கு 3 ஆண்டுகள் ஆகின்றது.

கடந்த 7வது ஊதியக்குழுவும் அப்படித்தான் அமரலானது.. அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டால்தான், 3 வருடங்களுக்கு பிறகே, அமல்படுத்த முடியும் என்பதால்தான், உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கங்களும் வலியுறுத்துகின்றன. அந்தவகையில், பொதுத்தேர்தலுக்கு முன்பேயே, இந்த புதிய கமிஷனை நியமிக்க நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள்.

ஊழியர்களின் சம்பளம்: அதேபோல, இந்த 8வது ஊதியக்குழு நியமனமாகும்போது, சில வழக்கமான நடைமுறைகள் மாற்றப்படக்கூடும் என்கிறார்கள்..

குறிப்பாக, 10 வருடங்களுக்கு ஒருமுறை என்பதற்கு பதிலாக, அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. காரணம், சம்பள உயர்வுக்கு (Salary Hike) ஊழியர்கள் நீண்ட காலத்துக்கு காத்திருக்க வேண்டாம் என்று அரசு நினைக்கிறதாம்.

 Central Government Employees Salary Hike and 8th Pay Commission come into effect from 2024 January with 50 % DA

ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று, 7வது ஊதியக் குழுவிலேயே ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிறும் ஆர்வம்: எனவே, குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதியம் 3 வருடங்களுக்கு ஒரு முறையும் ஊதிய பரிசீலனை செய்யப்படக்கூடும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.. இவையெல்லாம் சேர்ந்துதான், புதிய ஊதியக்குழுவில் திருத்தங்களாக அமையலாம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+