ரூ.6.5 லட்சம் லஞ்சம்.. சென்சார் போர்ட்டுக்கே செக் வைத்த விஷால் .. இன்றே விசாரிக்கும் மத்திய அரசு
சென்னை: மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் திரையிட மும்பை சென்சார் போர்டுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, நடிகர் விஷால் குற்றச்சாட்டு முன் வைத்தார். இந்த புகார் குறித்து இன்றே விசாரணை தொடங்குகிறோம் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், காதலை தேடி நித்தியாநந்தா, வெர்ஜின் மாப்பிள்ளை
பஹீரா ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

இந்நிலையில் இந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் அண்மையில் வெளியாகியது. மார்க் ஆண்டனி படம் தமிழ்நாட்டில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் தற்போதும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஷால், மார்க் ஆண்டனி படத்திற்காக லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தாக கூறி அதிரவைத்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் திரையிட சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்தேன் என்று கூறி நேற்று வீடியோ வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் திரையிட அதன் பதிப்பிற்காக மும்பை சென்சார் போர்டுக்கு ரூ. 6.5 லட்சம் லஞ்சம் கொடுத்தேன். என்னிடம் சென்சார் அதிகாரிகளுக்காக ரூ. 3 லட்சம் கேட்டார்கள், இதுதவிர படத்திற்கு சான்றிதழ் தருவதற்கு ரூ.3.5 லட்சம் கேட்டார்கள். இந்த லஞ்ச பணத்தை மேனகா என்ற இடைத்தரகர் மூலமாக இரண்டு தவணைகளாக கொடுத்தேன். அதன் பிறகே மார்க் ஆண்டனி படம் இந்தி மொழியில் திரையிடப்பட்டது " என விஷால் வேதனையுடன் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல், லஞ்சமாக பணம் செலுத்தியதற்கான வங்கி கணக்கு விவரங்களையும் அவர் பகிர்ந்தார்.

திரைபடங்களை ரிலீஸ் செய்வதற்கு சென்சார் போர்டு லஞ்சம் கேட்பதை பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிின் கவனத்திற்கு தான் எடுத்து செல்ல உள்ளதாகவும் விஷால் தனது வீடியோவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் விஷாலின் இந்த குற்றச்சாட்டிற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. அதில், "சென்சார் போர்டு ஊழல் குறித்து விஷால் அளித்து புகார் துரதிர்ஷ்டவசமானது. அரசு அதிகாரிகள் ஊழல் பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. ஊழல் குற்றச்சாட்டு கண்டுப்பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும. இன்றே மும்பைக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் சென்று விசாரணை நடத்த போகிறார்.
சினிமா துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து இதுபோன்ற ஊழல் துன்புறுத்தல்கள் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தகவல் அளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்சார் போர்டு மீது விஷால் வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சகம் உடனே நடவடிக்கையை எடுத்திருப்பது திரையுலகினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications