பல்வேறு குழப்பங்கள்; மறைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள்! இது யாருக்கான பட்ஜெட்?
2024 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.
இதுதான் மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் தேர்தலுக்கு முன் வெளியாகப் போகும் பட்ஜெட் என்பதாலும் அதிக அளவில் எதிர்பார்ப்புகள் நிலவின. குறிப்பாக சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதேனும் அறிவிப்புகள் இருக்கும் என்று பலரும் நம்பினர்.

ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் இல்லை. 55 நிமிடங்கள் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பேசினார். அதில் உப்பு சப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்தப் பட்ஜெட் யாருக்கானது? அதில் உள்ள குளறுபடிகள் என்ன? அது பற்றி பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயாவிடம் பேசினோம். அவர்,"10 ஆண்டுகாலம் மோடியின் ஆட்சியின் தரம் என்ன? அவர்கள் என்ன என்ன நலத்திட்டங்களைச் செய்திருக்கிறார்கள்? என்பதை எல்லாம் மக்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள். ஆகவே, இந்த பட்ஜெட்டில் பெரிய சலுகைகள் எல்லாம் இருக்கும் என மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு உண்மை தெரியும்.
வருமானவரி கட்டுபவர்கள், தொழில்துறை நிறுவனங்கள் ஏதேனும் எதிர்பார்த்து இந்த பட்ஜெட்டில் ஏமாந்து இருக்கலாம்.

கடந்த 10 ஆண்டுகால மோடி அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து கவனித்திருந்தவருக்கு ஒரு விசயம் நன்றாகப் புரிந்திருக்கும். பெரிய பணக்காரர்களுக்கான நேர்முக வரிகளுக்குத் தொடர்ந்து விலக்கை அளித்து அவர்களை சௌகரியமாக வைத்துக் கொள்வது.
அதே சமயம் சாதாரண மக்கள் மீது, அதாவது உழைக்கும் மக்கள் மீது, விவசாயிகள் மீது, சிறு குறு தொழில்முனைவோர் மீது பலகட்ட தாக்குதலைத் தொடர் செய்வது. இதுதான் கடந்த காலத்தில் இவர்களின் அணுகுமுறையாக இருந்துள்ளது.
உதாரணத்திற்கு, பண மதிப்பிழப்பு விவகாரம். இது சிறு வணிகர்கள் முதல் பொதுமக்கள் வரை மிகக் கடுமையாகப் பாதித்தது. அதைத் தொடர்ந்து 6 மாதத்திற்குள்ளாக மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட ஜிஎஸ்டியை நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள். அது தேச உற்பத்தி மதிப்பின் மீது சரிவை ஏற்படுத்தியது.

ஒன்றரைக் கோடி ரூபாய் வருமானம் இருந்தால்தான் எExcise duty- க்குள் வருவார்கள் என்பதை மாற்றி, 20 லட்சம் ரூபாய் டேன் ஓவர் இருந்தால் ஜிஎஸ்டிக்குள் வந்துவிடும் என்பதைக் கொண்டுவந்தார்கள். இது சிறு குறு தொழில்முனைவோரைத் துன்பத்திற்குள் கொண்டுவரக்கூடிய ஏற்பாடுதான்.
ஆரம்பத்தில் ஜிஎஸ்டியால் வருவாய் வரவில்லையே என் புலம்பினார்கள். இப்போது கொண்டாடுகிறது அரசு. மாதம் ஒன்றரை லட்சம் கோடி வருகிறது என மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சாதரான மக்களை, சின்ன தொழில்முனைவோர்களைக் கசக்கிப் பிழிந்து பெறுகின்ற வருமானத்தைக் கொண்டாடுகின்ற அரசாக இது இருந்து வருகிறது. இது எனக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது" என்றவர் மத்திய அரசு பட்ஜெட்டில் தனி நபர் வருமானம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது எனக் கூறப்பட்டுள்ளது குறித்தும் விளக்கம் அளித்தார்.
"தனிநபர் வருமானம் 50% உயர்ந்துள்ளதாகக் கூறவில்லை. மத்திய அரசு Per capita income வைத்து ஒரு கணக்குப் போடுகிறார்கள். அதைப்போல இன்னொரு இடத்தில் 6 கோடி ரூபாய் குறைத்திருக்கிறார்கள். இதன் மூலம் செலவை அரசுக் கட்டுப்படுத்தி இருக்கிறது.
இந்தக் கணக்குகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. உதாரணத்திற்கு வளர்ச்சி விகிதத்தை எடுத்துக்கொள்வோம். பண வீக்கம் 1.5% தான் உள்ளது என்கிறார்கள்.

இந்தக் கணக்கை எங்கு இருந்து எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. ரிசர்வ் வங்கி அப்படிச் சொல்லவில்லை. அது தொடர்ந்து உயரத்தில் உள்ளதாகவே சொல்லி வருகிறது. இவர்களே 1.5% என வைத்துக் கொண்டு அதைக் கணக்கிட்டு வளர்ச்சியின் விகதம் 7% என அறிவிக்கிறார்கள்.
இது உண்மை அல்ல. அரசு தருகின்ற ஒரு பொய்யான தகவல். கிட்டத்தட்ட 2019 முதல் இப்போது வரை 5 ஆண்டுகளில், 2019இல் பெரும் மந்தநிலையே இருந்தது. 4% க்கும் கீழே சென்றுவிட்டது. 2020 இல் கொரோனா வந்துவிட்டது.
அப்போது மைனஸ் 7% சரி இருந்தது. அதன்பின்னர் 2021 முதல் 2023 வரை வளர்ச்சி விகிதம் மெல்ல எழுந்து வந்தது. இந்த மீட்சிகூட உற்பத்தி மதிப்பைச் சார்ந்ததுதான்.
இதில் வேலைவாய்ப்பு, மக்களின் வாழ்வாதாரம் பற்றிய வளர்ச்சி எல்லாம் இதற்குள் அடங்காது. இது வேறு. அது வேறு. இன்றைக்கு மத்திய அரசு மிகையாகக் கணக்கிட்டுச் சொல்லும் ஜிடிபியின் அளவை எடுத்துக் கொண்டால் கூட , கடந்த 5 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 6% ஐ தாண்டி இருக்க வாய்ப்பே இல்லை.
உண்மை என்னவென்றால் இந்திய மந்தமான வளர்ச்சியில் உள்ளது.

சரி, இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு வருவோம். நடந்து முடிந்துள்ள நிதியாண்டில் மட்டும் உரமானியத்தில் மட்டும் 1000 கோடி ரூபாயை மத்திய அரசு வெட்டி இருக்கிறது.
வரி விகிதத்தை மத்திய அரசு ஏற்றவில்லை. ஆனால், மொத்த வருமானம் கூடி உள்ளது என்கிறார்கள். அது எப்படிக் கூடியது? மொத்த வருமானம் கார்பரேட் பக்கம் சென்றுள்ளது. ஆகவே வரிவருமானம் கூடி உள்ளது. இதில் சாமானியர்களுக்கு ஒன்றுக்கே இல்லை என்பதுதான் முக்கியமான பாயிண்ட்.
80 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளனர் என்கிறார்கள்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நிறைவேற்றப்பட்டது. அதைத் தடுக்க பாஜக என்ன என்னவோ செய்தது. அதை மீறி அது நிறைவேற்றப்பட்டது.
நிதி ஆயோக்கின் வறுமைக் கணக்கீட்டு அறிக்கையை அடிப்படையாக வைத்து 25 கோடி பேரை வருமானத்திலிருந்து மேலே கொண்டு வந்துவிட்டோம் என்கிறார்கள்.
அந்த நிதி ஆயோக் அறிக்கையில் உள்ள தரவுகள் எதுவுமே நேரடியான நுகர்வு குறித்ததோ வருமானம் பற்றிய தரவுகள் அல்ல. வறுமைக் கோட்டுக்கு நேரடி தொடர்பு இல்லாத பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி இந்த மோசடி கணக்கைச் சொல்கிறார்கள். அதிலும் கூட உண்மையான தரவுகள் இல்லை" என்கிறார்
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications