வாடகை வீட்டில் வசிப்போருக்கு நல்ல செய்தி.. அக்கவுண்டில் எத்தனை லட்சம் கிடைக்கும் தெரியுமா?
சென்னை: வாடகை வீட்டில் வசிப்போர் சொந்த வீடு வாங்கி செட்டில் ஆக வேண்டும் என்று ஆசையில் இருப்பார்கள். அவர்களுக்காக மத்திய அரசு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சரியாக விண்ணப்பித்தால் 12 லட்சம் முதல் 18 லட்சம் வரை பணம் உங்கள் வங்கி கணக்கில் விழும். எப்படி என்கிறார்களா? இதை பாருங்கள்.
மத்திய மாநில அரசுகள் சொந்த வீடு கனவை நினைவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 2லட்சம் முதல் 3லட்சம் வரை மானியம் தரும் அரசுகள், 10 லட்சத்திற்கும் அதிக அளவு கடனும் அளிக்கின்றன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகளைக் கட்ட ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015 ஜூன் 25இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் கிராமப்புறங்களில் கட்டப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் வீடு பெற வேண்டும் என்றால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் (EWS) வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.. குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்தவர்களின் (LIG) வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களில் MIG-1 பிரிவில் இருப்போரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களில் MIG-2 பிரிவில் இருப்போரின் வருமானம் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்..
மத்திய அரசின் இந்த திட்டப்படி வாடகை வீட்டில் வசிப்போர் சொந்த வீடு கட்டலாம். இத்திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானியம் பெற முடியும். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானிய தொகையை அதிகரிக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார். 2024-25 பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு 80,671 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கடனுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை மானிய கடன் பெறலாம். 3 சதவீத வருடாந்திர வட்டி தள்ளுபடி உண்டு. உதாரணமாக, ரூ.8 லட்சம் கடன் பெற்றால், ரூ.2.20 லட்சம் வரை வட்டி தள்ளுபடி தருகிறது மத்திய அரசு.
இன்னும் தெளிவாக சொல்வது என்றால், MIG-2 பிரிவினை சேர்ந்தவர் என்று வைத்துக்கொள்வோம் (அதாவது உங்கள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 12-18 லட்சம் வரை). 50 லட்சம் மதிப்புள்ள பிளாட் வாங்க பிளான் போட்ருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்கோம். நீங்கள் முன்பணமாக 20%, அதாவது ரூ.10 லட்சம் செலுத்த முடிவுசெய்துள்ளீர்கள். மீதமுள்ள 40 லட்சம் ரூபாய் கடன் மூலம் ஏற்பாடு செய்யப்படும். இருப்பினும், PMAY இன் கீழ், MIG-2 வகை விண்ணப்பதாரர்கள் ரூ. 12 லட்சம் வரையிலான கடனில் 3% மானியத்திற்கு தகுதியுடையவர்கள். எனவே, மீதமுள்ள 28 லட்ச ரூபாய் கடனுக்கு, நீங்கள் கடன் வழங்குபவருக்கு வழக்கமான (மானியம் அல்லாத) வட்டி விகிதங்களை செலுத்த வேண்டியது வரும்.
நீங்கள் பெறக்கூடிய PMAY மானியம் ரூ 2.3 லட்சம் ஆகும். இதில் கடன் தொகையான ரூ.12 லட்சத்தில், உங்களின் PMAY மானியமான ரூ.2.3 லட்சம் கழிக்கப்படும். மீதித் தொகையான ரூ.9.7 லட்சத்தில் நீங்கள் EMI செலுத்துவீர்கள் . தற்போது அதிகமாகபட்சமாக ரூ.12 லட்சம் வரை 3 சதவீத மானிய கடன் பெறலாம் என்கிற நிலை உள்ளது. வரும் பட்ஜெட்டில் மானியக்கடனை 18 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications