Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PMAY திட்டமா? கலைஞர் கனவு இல்லமா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி! தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்குகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது தவறான தகவல் எனத் தமிழக அரசின் உண்மைத்தன்மை சரிபார்ப்புக் குழு விளக்கம் அளித்துள்ளது... மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாக அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!!!

கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் உரையின்போது அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் குறித்து பேசிய அண்ணாமலை, மத்திய அரசின் "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா" (PMAY) திட்டத்திற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

PMAY Kalaignar Kanavu Illam Annamalai TN Housing Scheme Funding Subsidy

PMAY திட்டம்

ஆனால், இந்த வாதத்தை முற்றிலுமாக மறுத்துள்ள தமிழக அரசு, இத்திட்டத்திற்கான ஒட்டுமொத்த நிதியையும் மாநில அரசே பொறுப்பேற்று செயல்படுத்துவதாக தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக அரசின் விளக்கத்தின்படி, மத்திய அரசின் வீடற்றோருக்கு வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு பயனாளிக்கு ரூ.1.20 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் 60 சதவீத தொகையான ரூ.72000 மட்டுமே மத்திய அரசின் பங்காகும்.. மீதமுள்ள ரூ.48,000 தொகையை மாநில அரசு வழங்குகிறது.

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

ஆனால், இந்தத் தொகை ஒரு பாதுகாப்பான வீட்டை கட்ட போதாது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு தனது சொந்த நிதியிலிருந்து கூடுதல் பங்களிப்பைச் செய்கிறது. குறிப்பாக, கான்கிரீட் கூரை அமைப்பதற்காக தலா ரூ.1.20 லட்சத்தை தமிழக அரசு கூடுதலாக வழங்குகிறது. இதன் மூலம் ஒரு பயனாளிக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் கிடைக்கிறது.

இதில் மத்திய அரசின் பங்கு வெறும் 30 சதவீதம் மட்டுமே என்றும், மீதமுள்ள 70 சதவீத நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது சர்ச்சைக்குள்ளான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை பொறுத்தவரை, இது முற்றிலும் மாநில அரசின் நிதியால் மட்டுமே செயல்படுத்தப்படும் ஒரு தனித்துவமான திட்டமாகும். இதன்கீழ் ஒரு வீடு கட்டுவதற்குத் தலா ரூ.3.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியம் தரும் தமிழக அரசு

இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்குத் தமிழக அரசு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 'குடிசைகள் இல்லாத் தமிழ்நாடு' என்ற இலக்கை அடைவதற்காக மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை பெயர் மாற்றி மாநில அரசு விளம்பரம் தேடிக் கொள்வதாக அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அரசுத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமும் இதேபோல 100 சதவீதம் மாநில அரசின் நிதியில்தான் செயல்படுத்தப்படுகிறது. எனவே, முற்றிலும் மாநில நிதியில் இயங்கும் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்களோடு ஒப்பிடுவது பொதுமக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்தும் என்பதால், இந்த உண்மைத்தன்மை சரிபார்ப்பு விளக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு நிலம் இல்லாவிட்டால், நிலத்தையும் அரசே வழங்கும் எனத் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+