மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான டெண்டர்! குவியும் உலக நிறுவனங்கள்! மாஸ்டர் பிளானும் ரெடி
சென்னை: எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை ஆர்டிஐ சட்டம் மூலம் உறுதியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தொப்பூர் அருகே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்த மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட உதயநிதி ஸ்டாலின் செங்கல்லில் எய்ம்ஸ் என எழுதி இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என கிண்டல் செய்தார்.
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்போது தொடங்கப்படும் என்பது போன்ற தகவல்களை மத்திய அரசு இதுவரை வெளியிடப்படும். இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீட்டிற்கு முன்பு செய்ய வேண்டிய அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளது. இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாட்டு ஒப்பந்தங்களின்படி மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் அக்டோபர் 2026 க்குள் முடிக்கப்பட வேண்டும்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ 1977.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணிகளுக்கான திட்ட மேலாண்மை இயக்குநர்களும் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அது போல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவனை வளாகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இல்லாத தொற்று நோய் தடுப்பு பிரிவு தொடங்கப்படும்.
இதற்காக வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள் கட்ட வேண்டும் என்பதால் கட்டுமான தொகையில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. முழு திட்டத்துக்கான வரைப்படம் இறுதி செய்யப்பட்டு திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 2ஆம் தேதிக்குள் டெண்டர் இறுதி செய்யப்படும். உலகளவில் பெரிய நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications