இதை கவனிச்சீங்களா மக்களே.. எந்த நாளில் எப்படி பல்டி அடிச்சிருக்கு பாருங்க மத்திய அரசு!
Recommended Video
சென்னை: இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய கருணாநிதியின் பிறந்தநாளில் 3ஆவது மொழி தொடர்பாக மத்திய அரசு முக்கிய திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்த போது 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நாள் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கி ஆணை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் உயர்நிலை பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவனும் தனது கையில் தமிழ்க் கொடியை ஏந்தி இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டார். வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம், வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடுவோம் என்ற முழக்கமிட்டபடி சென்ற அந்த சிறுவன், மறுநாள் பள்ளிச் சென்ற போது இந்தி ஆசிரியர் அடித்தார். அடி வாங்கினாலும் தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தார்.

கருணாநிதி
அந்த சிறுவன்தான் பின்னாளில் தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்த வரலாறு உள்ளது. இன்று கருணாநிதியின் 96-ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழையும் கருணாநிதியையும் பிரித்து பார்க்க முடியாது என்பது அவரது எழுத்துகளால் அனைவரும் நன்கறிவர். மேலும் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

வரைவு திட்டம்
கருணாநிதிக்கு தமிழ் மீதான காதல் சிறுவயது முதலே இருந்தது. அதன் வெளிப்பாடுதான் 14 வயதில் அவர் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்த நிலையில் சுமார் 80 ஆண்டுகள் கழித்து இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை வெளியிட்டது.

பரிந்துரை
தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டது.

எதிர்ப்பு
இந்த குழுவின் பரிந்துரைபடி 8-ஆம் வகுப்பு வரை 3-ஆவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்படும். இந்த பரிந்துரையை ஏற்று இந்தியை கட்டாயமாக்கினால் போர் தொடுப்போம் என கருணாநிதி பாணியில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். அவர் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திமுக தொண்டர்கள்
கடும் எதிர்ப்புகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதில் தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்றும் 3-ஆவது மொழியாக எந்த மொழியையும் மாணவர்கள் படிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தி எதிர்ப்புக்காக போராடிய கருணாநிதியின் பிறந்தநாளன்று இந்தி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications