Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு.. இன்று பந்தக்கால் நடப்பட்டது.. ஏற்பாடுகள் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு பணிகளுக்கான பந்தக்கால் இன்று நடப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகப் பிரபலமானவை. இதைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு ரசிகர்கள் வருகை தருகிறார்கள். முக்கியமாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

Ceremonial Pole Erected for World-Famous Jallikattu Events at Alanganallur and Palamedu

இந்த நிலையில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் பாலமேட்டில் பந்தக்கால் நடும் பணி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், ஊர் பிரமுகர்கள், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, அவனியாபுரம் கோயிலருகே சிறப்பு பூஜைகள் செய்து மா இலைகள், வேப்பிலைகள் கட்டப்பட்ட பந்தக்கால் நடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சாலையோரங்களில் பார்வையாளர்கள் அமர்கின்ற மேடை, மாடுகள் உள்ளே வருவதற்கான வாடிவாசல் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகள் நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம் போல், முதல் பரிசாக கார் வழங்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன.

காளைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி, காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும்.
காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்வது அவசியம்.
போட்டி நடைபெறும் தினத்தன்று, 5 கி.மீ. சுற்றள வுக்கு அருகில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும்.
காதாரத் துறையினர் மாடுபிடி வீரர்களுக்கு முழு உடல் தகுதி, ஊக்க மருந்து சோதனை மேற்கொள்ள வேண்டும்.

காயம் அடைந்தவர்களுக்கு முறையான முதலுதவி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.
பொதுப்பணித் துறையினர் பார்வையாளர் கேலரி, இரட்டைத் தடுப்புகள் உறுதிச் சான்று வழங்கல், இரட்டை அரண்கள் குறைந்த பட்சம் 100 மீட்டர் நீளம், 8 அடி உயரத்துக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் போட்டி நடைபெறும் இடத்தில் போதுமான எண்ணிக்கையிலான காவலர்களை நியமித்து சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்தும் விழாக் குழுவினர் முன் அனுமதி பெற்று, அனுமதிக்கப்படும் காளைகள் பட்டியலை வழங்க வேண்டும்.
பார்வையாளர்களுக்கு உணவு, குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
மாட்டின் உரிமையாளர்கள் காளைகளை உரிய விதிமுறைபடி ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு அழைத்துவர வேண்டும்.
காளைகளுக்கு போதுமான ஓய்வு மற்றும் அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப் பட்ட காளைகள் அனுமதிக்கப்படுவதை உறுதி செய்து, சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து விதி மீறலில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காளைகளின் உரிமையாளர்கள் பெயரோடு சாதி பெயர்களை அறிவிக்கக் கூடாது. மேலும், ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் மற்றும் பங்கேற்பவர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+