கூகுள் மேப்-பிற்கே சவால்? சென்னையின் 300 சாலைகளில் மாறுகிறது அந்த விஷயம்! டிரைவர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: சென்னை மாநகரம் விரிவடைந்து கொண்டே செல்வதால், புறநகர்ப் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பு மேம்பட்ட அளவிற்கு வழிகாட்டி பலகைகள் இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை என்ற ஆதங்கம் மக்களிடையே இருந்து வந்தது.. இதற்கெல்லாம் மாநகராட்சி ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.. அது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.. இதனால் சாலைப் போக்குவரத்து மிகவும் சீரானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது. அது என்ன தெரியுமா?
சென்னை மாநகரின் அசுர வேக வளர்ச்சிக்கு ஏற்ப, அதன் போக்குவரத்து கட்டமைப்பிலும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெருகி வரும் வாகன நெரிசலைக் குறைக்கவும், சாலை விபத்துகளைத் தவிர்க்கவும் பெருநகர சென்னை மாநகராட்சி தற்போது ஒரு புதிய மற்றும் நவீன திட்டத்தைத் தீட்டியுள்ளது.

சென்னை மாநகராட்சி
இதன்படி, நகரின் 300 முக்கிய சாலைகளில் சித்திரங்கள் மற்றும் குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய நவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம், வாகன ஓட்டிகளுக்குத் தெளிவான திசைகளைக் காட்டுவதுடன், பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நவீனத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் தகவல் பலகைகள் வெறும் திசை காட்டும் கருவியாக மட்டும் இருக்காது. இவை விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள், பள்ளி குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கடக்கும் பாதைகள் போன்றவற்றில் டிரைவர்களை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் பிரத்யேகக் குறியீடுகளைக் கொண்டிருக்கும்.
ஸ்பெஷல் பலகைகள்
குறிப்பாக, இந்த பலகைகள் வெறும் திசை காட்டும் கருவியாக மட்டும் இல்லாமல், முன்கூட்டியே அபாயங்களை எச்சரிக்கும் முறையிலும் செயல்படும். இதன் மூலம் ஓட்டுநர்களிடையே சுயக்கட்டுப்பாடு அதிகரிக்கும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த மாற்றத்தின் மிக முக்கியமான அம்சம் என்ன தெரியுமா? எழுத்துக்களுக்கு பதிலாக டிராயிங் அதாவது சித்திரங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்துவதாகும்.
இப்போதுள்ள பலகைகளில் பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களே பிரதானமாக உள்ளன. இதனால் தமிழை வாசிக்க தெரியாதவர்களோ அல்லது பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களோ சரியான திசையை அறிந்துகொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதனால்தான் இதனைச் சரிசெய்யும் விதமாக, சர்வதேச தரத்திலான குறியீடுகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மொழி தெரியாதவர்களும் எளிதில் திசைகளையும் எச்சரிக்கைகளையும் புரிந்துகொள்ள முடியும்.
சென்னையின் 300 சாலைகள்
இது சாலைகளில் தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து, போக்குவரத்து மேலும் கணிக்கக்கூடியதாகவும், குழப்பம் குறைந்ததாகவும் மாறும் என்பதற்குச் சான்றாக அமையும்.
முதற்கட்டமாக நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா நகர், அண்ணா சாலை, வேளச்சேரி மற்றும் பெருங்குடி போன்ற அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இந்த நவீனப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.
இரவு நேரங்களில் டிரைவர்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில், ஒளி எதிரொலிக்கும் தன்மையுடன் இவை டிசைன் செய்யப்பட உள்ளன. ஸ்பீடு பிரேக்குகள், ஆபத்தான வளைவுகள் உள்ள இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஏற்படும் விபத்துகளை தடுக்க இந்த முயற்சி ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
டிரைவர்களுக்கு குட் நியூஸ்
சென்னை மாநகரத்தின் விரிவாக்கம் அடைந்த புறநகர்ப் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பு வளர்ந்த அளவிற்கு, வழிகாட்டிப் பலகைகள் இன்னும் முறையாக அமைக்கப்படவில்லை என்ற குறையை நீண்ட நாட்களாகவே சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் முன்வைத்து வந்தனர்.
இப்போது மாநகராட்சியே எடுத்துள்ள இந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான நடவடிக்கை, புதிய பகுதிகளுக்கு வருபவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என்றே தெரிகிறது.. அதுவும் இந்த திட்டம் முறையாகச் செயல்படுத்தப்பட்டால், சென்னை மாநகரின் சாலைகள் விபத்தில்லாப் பாதைகளாக மாறுவதுடன், உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மேலாண்மையைக் கொண்ட நகரமாக சென்னை உருவெடுக்கும் என்பதில் நோ டவுட்....!!!
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications