மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலியில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை
மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவக்காற்று காரணமாக இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. துரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு கும்பகோணத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) தலா 2, மஞ்சளாறு (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), தொண்டி (ராமநாதபுரம்) தீர்த்தாண்டதனம் (ராமநாதபுரம்), தென்பரநாடு (திருச்சி), புதுச்சேரி (புதுச்சேரி), கங்காவள்ளி (சேலம்) தலா 1.

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளைய தினம் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.
நாளைய தினம் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,13ஆம் தேதிகளில் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கரூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications