வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.. நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. இன்று முதல் பலத்த மழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.. வானிலை வரலாற்றில் முதல் முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

தமிழ்நாடு
அது அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை விட்டு தெரிவித்திருந்தது. எனவே, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை
மேலும் மார்ச் 5 மற்றும் 6-ம் தேதி தமிழ்நாட்டின் டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்திருந்தது.

ஆய்வு மையம்
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.காற்றின் வேகம் மணிக்கு 45-55 கிமீ வேகத்தில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்..

மீனவர்கள்
காற்றின் வேகமானது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் தமிழகக் கடற்கரையிலும், மன்னார் வளைகுடா மற்றும் கொமோரின் பகுதியிலும், பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலிலும் நிலவும். மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு மேலான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நெருங்குகிறது
வானிலை வரலாற்றில் முதல் முறையாக மார்ச் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழக பகுதிகளை நெருங்குவதாக தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நாளை 5ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இடிமின்னல்
6ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை
7ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.. கடந்த 130 வருடங்கள் 5 புயல்களும் 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் வங்க கடலில் உருவாகி உள்ளது. 1938 ல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையும், 1994 ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் அந்தமானையும் நெருங்கியது, இது வரை இருக்கக்கூடிய வானிலை வரலாற்றின் அடிப்படையில் தமிழகத்தை நெருங்கும் முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இதுதான் என்று அவர் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications