சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாந்தினியின் செல்போனிலும் மெயிலிலும் குவிந்துள்ள ஆதாரங்கள்?.. ஹேக் செய்ய முயற்சி என புகார்

Google Oneindia Tamil News

சென்னை: துணை நடிகை சாந்தினியின் செல்போனை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததால் கடந்த 5 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த நிலையில் தற்போது அவர் தன்னை மிரட்டி வருவதாக துணை நடிகையும் மலேசிய தூதரகத்தில் பணியாற்றுபவருமான சாந்தினி புகார் அளித்துள்ளார்.

தனக்கு 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மேலும் காப்பர் டி கருவியை கர்ப்பப்பையில் பொருத்த வைத்து தன்னுடன் குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

மர்மம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் எங்கே? நடிகை சாந்தினி வழக்கில் உச்சகட்ட பரபரப்பு மர்மம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் எங்கே? நடிகை சாந்தினி வழக்கில் உச்சகட்ட பரபரப்பு

மணிகண்டன்

மணிகண்டன்

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் ராமநாதபுரத்திற்கு சென்றுள்ளார்கள். ஆனால் மணிகண்டனோ அவரது 2 செல்போன்களையும் ஆஃப் செய்து தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. அவர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாந்தினி

சாந்தினி

இந்த நிலையில் பணம் பறிப்பதற்காக தன் மீது சாந்தினி இத்தகைய புகாரை கொடுத்துள்ளதாக மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு முன் ஜாமீன் தரக் கூடாது என ஆட்சேபனை மனுவை சாந்தினி தாக்கல் செய்துள்ளார்.

பொய்

பொய்

தான் பணம் பறிக்க பாலியல் புகாரை அளித்ததாக மணிகண்டன் கூறுவது பொய். தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததால் கணவன், மனைவியாக வாழ சம்மதித்தேன் என கூறியுள்ளார். மேலும் தனது செல்போனும் ஈ மெயிலும் ஹேக் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.

Recommended Video

    போலீஸ் தேடும் நிலையில் முன்ஜாமீன் கோரி Manikandan ஹைகோர்ட்டில் மனு
    போலி இ மெயில்

    போலி இ மெயில்

    சிபிஐ என்ற பெயரில் போலி இ மெயில் அனுப்பி தனது மெயிலை ஹேக் செய்ய முயற்சிகள் நடத்தப்படுவதாகவும் சாந்தினி தெரிவித்தார். மேலும் இ மெயிலின் பாஸ்வேர்ட்டை கேட்டு தொல்லை செய்வதாகவும் தெரிவித்த அவர் என்னிடம் உள்ள ஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள் என புகார் அளித்துள்ளார்.

    English summary
    Chandini gave complaint against Manikandan that some are trying to hack her mobile and Email Id.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X