நயினார் நாகேந்திரனுக்காக பிரச்சாரம் செய்ய வரும் சந்திரபாபு நாயுடு.. பின்னணியில் சாதி ஓட்டு கணக்கு?
விருதுநகர்: சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரும் 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். சாத்தூர் தொகுதியில் நாயக்கர் சமூக மக்கள் கணிசமாக உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. வரும் 21 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள். எனவே வேட்பாளர்கள் தற்போது வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது தேசிய தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழகம் வந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக உடன் இணைந்து செயல்படும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, சாத்தூரில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளான ஏப்ரல் 21 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். முன்னதாக நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரச்சார பேரணியை மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் 21 ஆம் தேதி துவக்கி வைக்க இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 2 மணியளவில் சாத்தூருக்கு வருகை தரும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சாத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் அன்றைய தினமே தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு அவர் ஆந்திரா திரும்ப இருக்கிறார்.
சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில், முக்குலத்தோருக்கு அடுத்து அதிகமாக நாயக்கர் சமூக மக்கள் உள்ளனர். நாயக்கர் சமூக வாக்காளர்கள் இங்கு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்வது தனக்கு கைகொடுக்கும் என்பது நயினார் நாகேந்திரனின் எதிர்பார்ப்பாம்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications