நிலவில் கால் பதித்த சந்திரயான் 3.. சோமயான்.. சந்திரயான் ஆக மாறிய கதை.. வாஜ்பாய் போட்ட விதை
சென்னை: சந்திரனில் கால் பதித்து சரித்திர சாதனை படைத்துள்ளது பாரத தேசம். உலகத்தில் உள்ள அனைவரின் கண்களும் சந்திரனை நோக்கி இருந்தது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் நிலவு குறித்த ஆராய்ச்சி பயணத்திற்கு சந்திரயான் என்று பெயர் வந்தது எப்படி என்று சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சோமன் என்றால் சந்திரன் என்று அர்த்தம்.. மிஷன் சோமயான் என்று இஸ்ரோ பெயரிட்டதை சந்திரயான் 1 என்று பெயரை மாற்றி நிலவு ஆராய்ச்சிக்கான பெயரை மாற்றியவர் அப்போதய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.

கடந்த 2003 ஆம் ஆண்டு நாட்டின் 56வது சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் அரண்மனையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், இந்தியாவின் முதல் நிலவு ஆய்வுத் திட்டத்தை வெளியிட்டார்.
சந்திரயான் 1 . "நம் நாடு இப்போது அறிவியல் துறையில் உயரப் பறக்க தயாராக உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு சந்திரயான் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று உற்சாகமாக அறிவித்தார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை கூறியுள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டில் இஸ்ரோவின் தலைவராக இருந்த கஸ்தூரிரங்கன், சந்திரன் ஆராய்ச்சிக்காக அனுமதி கோரி மத்திய அரசை அணுகினார். அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், பணியின் பெயர் என்ன என்று கேட்டார். இந்த சோதனைக்கு 'சோமயான்' என்று பெயரிட விரும்புவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த பெயர் சமஸ்கிருதத்தில் ஒரு வசனத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஸ்லோகத்திற்கு.. 'ஓ சந்திரனே.. எங்களின் புத்திசாலித்தனத்தால் உன்னை அடைய விரும்புகிறோம். எங்களுக்கு வழிகாட்டு என்று அர்த்தம். கஸ்தூரிரங்கன் வாஜ்பாயிடம் அதனால்தான் அந்தப் பெயரை வைத்தார்கள் என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்த வாஜ்பாய், சந்திரன் பயணத்திற்கு 'சந்திரயான் 1' என்று பெயரிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். "இப்போது நாடு பொருளாதார சக்தியாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் நிலவுக்கு அதிக பயணங்களை மேற்கொள்ளும் திறன் எங்களிடம் உள்ளது" என்று வாஜ்பாய் கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் கஸ்தூரி ரங்கன்
இதற்கிடையில், 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வாஜ்பாய் இந்த பரிசோதனையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். "நமது நாடு இப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உயர் நிலைக்கு உயரத் தயாராக உள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குள் நமது விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவோம். அந்த பணியின் பெயர் சந்திரயான் என்று வாஜ்பாய் அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கூறியது போல, முதலில் சந்திரனுக்கு விண்கலத்தை ஏவுவதற்கான திட்டங்களைத் தயாரிக்க நான்கு ஆண்டுகள் ஆனது. சந்திரயான்-1 நிலவின் மேற்பரப்பில் நீரின் தடயங்களைக் கண்டறிந்ததால் இந்த பணி வெற்றிகரமாக முடிந்தது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட சந்திரயான்-2 கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. தோல்வியில் பாடம் கற்ற இஸ்ரோ வெற்றிகரமான பயணத்தை தொடங்கியது. கடந்த ஜூலை 14ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் கால்பதித்துள்ளது. உலகமே இப்போது இந்தியாவின் சாதனையை பாராட்டி வருகிறது. இந்த சரித்திர சாதனைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே விதை போட்டவர் அப்போதய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications