Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எழும்பூரில் 45 நாட்கள் மின்சார ரயில்கள் சேவையில் மாற்றம்.. தாம்பரம் செங்கல்பட்டுக்கு புதிய நேரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ச்சியாக மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வருகிற 20-ந்தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. இதற்காக தற்காலிக மின்சார ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் அனைத்து தினங்களும் இந்த புதிய தற்காலிக அட்டவணைப்படி இயக்கப்படும்.

கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரையில் 10 நாட்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மறுசீரமைப்பு பணிகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நடைபெற இருப்பதால், நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் இருந்து இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Change in electric train service at Egmore for 45 days New timings for Tambaram and Chengalpattu

எழும்பூர் ரயில் நிலையம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றும் வகையில் பிரம்மாண்டமான மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரயில்வேயின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்திற்காக சுமார் ₹734.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பணிகள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் மாற்றப்பட உள்ளது. இதன்படி பல்வேறு பணிகள் நடக்கிறது. காந்தி இர்வின் சாலை (பிரதான நுழைவாயில்) மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை (பின்புறம்) ஆகிய இரு பக்கங்களிலும் தலா 3 மாடி (G+3) கொண்ட பிரம்மாண்டமான புதிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது.. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் ரயிலில் இருந்து இறங்கி வெளியே செல்லும் பயணிகள் என இரு தரப்பினருக்கும் தனித்தனி பாதைகள் அமைக்கப்படுகிறது.


அடுக்குமாடி பார்க்கிங்

இரண்டு நுழைவாயில்களிலும் 5 மாடி (G+5) கொண்ட பிரம்மாண்டமான அடுக்குமாடி வாகன காப்பகம் அமைக்கப்படுகிறது. இதில் வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களும் இடம்பெறுகிறது. அனைத்து நடைமேடைகளையும் (Platforms) இணைக்கும் வகையில் சுமார் 36 மீட்டர் அகலமுள்ள பிரம்மாண்ட நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இத்துடன் மெட்ரோ ரயில் நிலையமும் இணைக்கப்படுகிறது.

32 எஸ்கலேட்டர்கள்

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் செல்ல சுமார் 32 எஸ்கலேட்டர்கள் மற்றும் 47 லிஃப்ட்கள் நிறுவப்படுகிறது. ரயில் நிலையத்தின் மின்தேவையைப் பூர்த்தி செய்ய மேற்கூரையில் சூரிய ஒளி மின் தகடுகள் பொருத்தப்படுகிறது. அதேபோல் குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறைகள், நவீன உணவகங்கள் , மற்றும் பயணிகளுக்கான ஓய்வறைகள் உலகத்தரத்தில் அமைக்கப்படுகிறது.

மின்சார ரயில்கள் இயக்கம் மாற்றம்

இப்படி பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கடந்த 8-ந்தேதி முதல் இன்று (புதன்கிழமை) வரையில் 10 நாட்கள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இருந்து இயக்கப்படுவதாக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது.

பகலில் நடைபெற போகிறது

இந்தநிலையில், எழும்பூரில் மின்சார ரயில் நடைமேடையில் இரவு நேரம் மட்டும் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக நடைபெற இருப்பதால், நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் முழுவதுமாக எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் இருந்து இயக்கப்பட இருப்பதாக ரயில்வே கூறியுள்ளது.

45 நாட்கள் மாறுது

இதுகுறித்து, தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "சென்னை எழும்பூரில் நடைமேடை 10, 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் வருகிற 20-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரையில் 45 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடை 5, 6-ல் இருந்து இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்-அரக்கோணம் செல்லும் ரயில்கள் நடைமேடை 6-ல் இருந்து இயக்கப்பட உள்ளது.

நடைமேடை 5ல் இருந்து செல்லும்

இதேபோல, அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரயில்கள் நடைமேடை 5-ல் இருந்து இயக்கப்பட உள்ளது. இதற்காக தற்காலிக மின்சார ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த 45 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில் இயக்கப்படாது.

புதிய தற்காலிக அட்டவணை

அதாவது, ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் அனைத்து தினங்களும் இந்த புதிய தற்காலிக அட்டவணைப்படி இயக்கப்படும். இதில் ஏ.சி. மின்சார ரயில் வழக்கமான நேர அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. சில மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்பட இருக்கிறது. வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பாதுகாப்பு சோதனை முடிந்த பிறகு, மார்ச் இறுதியில் ரயில் சேவை தொடங்கும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+