கிளம்புங்க போகலாம்.. ஆர்டர் போட்ட சசிகலா.. கடைசியில் பிளானை மாற்றி.. ஏன் இப்படிலாம்? சரியில்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் பயணத்தை சசிகலா பாதியில் முடித்துக்கொண்டு சென்னை கிளம்பி சென்றது ஏன் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

சசிகலாவின் குலதெய்வ கோவில் வழிபாடும், தஞ்சை பயணமும் தமிழக அரசியலில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 3 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து தஞ்சை சென்றவர் தனது ஆன்மீக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இடையில் சசிகலா இப்படி தஞ்சாவூர் சென்றது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக, அமமுக, திமுக என்று பல தரப்பும் சசிகலாவின் ஒவ்வொரு மூவையும் தீவிரமாக கவனித்து வருகிறார்கள்.

கோவில்

கோவில்

தஞ்சாவூர் சென்ற சசிகலா அங்கு குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்தினார். விளார் கிராமத்தில் உள்ள அவரது குல தெய்வமான வீரனார் கோவிலுக்கு சென்று வழிப்பட்டார். பெரிய அளவில் கூட்டத்தோடு உறவினர்கள் பலர் சசிகலா உடன் இருந்தனர். அதன்பின் திருவிடைமருதூர் கோவிலிலும் சசிகலா வழிபாடு நடத்தினார்.

குறி கேட்டார்

குறி கேட்டார்

இங்கு சசிகலா உறவினர்களை சந்தித்ததும், காது குத்து விழாவில் கலந்து கொண்டதும், சில அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்ததும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. முக்கியமாக சாமியாரிடம் இவர் குறி கேட்டதும், தன்னுடைய எதிர்காலம் குறித்து விசாரித்ததும் விவாதத்திற்கு உள்ளானது. இப்படி இருக்க சசிகலா தஞ்சை பயணத்தை பாதியில் முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார். இங்கு சசிகலா உறவினர்களை சந்தித்ததும், காது குத்து விழாவில் கலந்து கொண்டதும், சில அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்ததும் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. முக்கியமாக சாமியாரிடம் இவர் குறி கேட்டதும், தன்னுடைய எதிர்காலம் குறித்து விசாரித்ததும் விவாதத்திற்கு உள்ளானது. இப்படி இருக்க சசிகலா தஞ்சை பயணத்தை பாதியில் முடித்துவிட்டு சென்னை வந்துள்ளார்.

சென்னை

சென்னை

திட்டப்படி சசிகலா 3 நாட்கள் தஞ்சையில் இருக்க வேண்டும். நேற்று சசிகலாவின் மறைந்த கணவர் நடராசனின் நினைவு நாள். விளார் சாலையில் உள்ள நடராசனின் சமாதியில் சசிகலா மரியாதை செலுத்துவதுதான் இந்த பயணத்தின் நோக்கம். ஆனால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் சசிகலா முதல் நாளே கிளப்பி சென்னை சென்றுவிட்டார் .. அவசர அவசரமாக முடிவை மாற்றி திடீரென சென்னை சென்றுவிட்டார்.

காரணம்

காரணம்

சசிகலா இப்படி திடீரென முடிவை மாற்ற என்ன காரணம் என்று விசாரித்தோம்.. அவருக்கு நெருக்கமான சில வட்டாரங்கள் தெரிவித்ததாவது.. சசிகலாவிற்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. ஏற்கனவே அவர் ஜெயிலில் இருந்து வந்த போது உடல்நிலை சரியில்லாமல் போனது. இப்போதும் கொஞ்சம் அவருக்கு உடல் சரியில்லை. இதனால் சென்னை திரும்பிவிட்டார்.

ஏன் இப்படி ?

ஏன் இப்படி ?

நடராஜன் நினைவிடத்திற்கு சசிகலா ஏற்கனவே சென்றுவிட்டார். தஞ்சாவூர் வந்த முதல் நாளே சென்றுவிட்டார். இதனால் அவர் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அங்கு நிறைய அரசியல் கட்சி நிர்வாகிகள் வருவார்கள், தேர்தல் நேரத்தில் தேவையில்லாத சர்ச்சை வரும். அதிமுகவிற்கு எதிராக செயல்படுவது போல பெயர் வரும் என்பதால்.. அதை எல்லாம் தவிர்க்கும் முடிவில் அவர் சென்னை கிளம்பி சென்று இருக்கிறாராம்.

அமமுக

அமமுக

முக்கியமாக சில அமமுக நிர்வாகிகள் சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டனர். இதில் முக்கிய புள்ளி ஒருவரும் அடக்கம் . இந்த நினைவு நாள் நிகழ்ச்சியிலேயே சசிகலாவை சந்திக்க நேரம் கேட்டு இருந்தனர். தேர்தல் நேரத்தில் இதை விரும்பாத சசிகலா அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு சென்னை சென்றுவிட்டார் என்கிறார்கள்.

தினகரன்

தினகரன்

இந்த நினைவு நாள் நிகழ்ச்சிக்கு தினகரன் வருவதாக இருந்ததால்.. பொது மேடையில் அவரை சந்திக்கும் விருப்பம் இல்லாமலும் சசிகலா சென்னை சென்றுவிட்டார். பொது மேடையில் தினகரன் உடன் தன்னை பார்த்தால் அது தவறான சிக்னலாக மாறும். அமமுகவிற்கு சசிகலா ஆதரவு என்பது போல மாறும். அதை தடுக்கவே சசிகலா சென்று சென்றார் என்றும் பேசிக்கொள்கிறார்கள் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+