மைதானத்தில் பிரார்த்தனை செய்றது தப்பில்லைன்னா.. ஜெய்ஸ்ரீராம் சொல்றதும் தப்பில்லை- வானதி சீனிவாசன்
சென்னை: விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியுள்ளார். ஜெய்ஸ்ரீராம் என்று பாகிஸ்தான் வீரரை பார்த்து அகமதாபாத் ரசிகர்கள் கோஷமிட்ட நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கிரிக்கெட்: உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. போட்டியில் முன்னதாக விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் வீரர் ரிஸ்வான் 49 ரன்களில் அவுட்டானார். அவர் மைதானத்திலிருந்து வெளியேறி பெவிலியனுக்கு நடந்து செல்லும்போது இந்திய ரசிகர்கள் சிலர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிட்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
உதயநிதி: இது தொடர்பாக, "முகமது ரிஸ்வானுக்கு எதிராக பார்வையாளர்கள் எழுப்பிய முழக்கங்கள் கீழ்த்தரமானது'' என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாஜகவினர் பலரும் ஆதரவாக கருத்து வருகின்றனர். அதே நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்திற்கு ஆதரவாக கருத்துக்கூறி வருகின்றனர்.
சீமான்: இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது கருத்தை கூறியிருந்தார். கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று சீமான் கேட்டார். நான் இதை சொல்றதுக்கு ரொம்ப வருத்தப்படுகிறேன். நாம் வணங்கும் தெய்வங்களை கழிவறைகளுக்கு மட்டும்தான் இன்னும் இவனுங்க கூட்டிட்டு வரல என்று சொன்னார்.
என்ன சம்பந்தம்: கிரிக்கெட் மைதானத்தை எதுக்கு உடுக்கை மாதிரியும், விளக்கு கம்பங்களை சூலம் மாதிரியும் அமைக்குற? அங்க உட்காந்துட்டு நீ ஜெய் ஸ்ரீராம்னு கோஷம் போடுற? என்றார். நாளைக்கு ஒரு முஸ்லிம் நாட்டுக்கு போய் நீ விளையாடுறனு வெச்சுக்குவோம். அவன் என்ன பண்ணுவான். அல்லா ஹு அக்பர்னு கோஷம் போடுவான். இதுலாம் ரொம்ப கொடுமையான விஷயம். நான் கேக்குறேன்.. ராமருக்கும், கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? என்றும் கேட்டார்.
வானதி சீனிவாசன்: இந்த நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது எப்படி தவறில்லையோ அதே போல ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுவது தவறில்லை என்றும் வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
எல்லாமே ரைட்டு: தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் "ஜெயிக்க வேண்டுமென மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போடுவதும் தப்பில்லை. இது தப்புன்னா எல்லாத்தையும் தப்புன்னு சொல்லுங்க. இது ரைட்டுன்னா எல்லாத்தையும் ரைட்டுன்னு சொல்லுங்க.
அரசியலாக்கக்கூடாது: இதை அரசியலாக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் யார்? விளையாட்டை அரசியலாக பார்க்கக் கூடாதென்று நினைப்பவர்கள் இதை அரசியலாக பார்க்கக் கூடாது. இதை நீங்கள் அரசியல் பண்ணனும் என்றால் நியாயமாக அரசியல் பண்ணுங்க என்றும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
பிரார்த்தனை: விளையாட்டின்போது பிரார்த்தனை என்று வானதி சீனிவாசன் கூறுவது பாஜக ஆதரவாளர்கள் கூறுவதை போல இஸ்லாமிய விளையாட்டு வீரர்கள் சிலர் மைதானத்திற்குள் தொழுகை நடத்துவதைதானா என்பது தெரியவில்லை. ஆனால் மறைமுகமாக அவர் இதைத்தான் சொல்கிறார் என்று கூறப்படுகிறது.
-
IT Jobs: 3 பிரிவில் காலியிடங்கள்.. சென்னை உள்பட 2 இடங்களில் மார்ச் 21ல் இண்டர்வியூ.. ரெடியா? -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications