பயமூட்டும் செம்பரம்பாக்கம்.. கிடுகிடுவென நிரம்பும் நீர்! 6000 கனஅடி திறக்க முடிவு -சென்னைக்கு அலர்ட்
சென்னை: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ள மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளான செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரும் ஏரியான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

452 கன அடியாக இருந்த நிலையில் தற்போது அது 514 கன அடியாக அதிகரித்து இருக்கிறது.
3,645 மி.கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக கன அடி நீர் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. ஏரி வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை நெருங்கி வருவதால், பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் நீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக செவ்வாய்கிழமை 200 கன அடி நீர் திறக்கப்பட்டு நேற்று 1000 கன அடி, 1500 கன அடி என படிப்படியாக உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அளவு 2,429 கன அடியாக இன்று அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 6000 கன அடி நீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 6000 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் அதன் கரையோர பகுதிளான அடையாறு, திருமுடிவாக்கம், சிறுகளத்தூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அடையாற்றில் 40 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் செம்பரம்பாக்கம் கரையோரம் மற்றும் அதன் நீர் வெளியேற்ற பாதையில் அமைந்து இருக்கும் பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கூறப்படுகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications