செங்கல்பட்டில் பேசிட்டேயிருந்த காதல் மனைவி.. டக்னு கணவர் பண்ண காரியத்தால் ஆடிப்போன ஜனம்.. ஓவர் டவுட்
சென்னை: குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், இதற்கு அடிப்படையாக காரணமாக இருந்து வருவது கள்ளக்காதல்.. அதேபோல சந்தேகத்தினால் ஏற்படும் வன்முறைகளாலும் குடும்பங்கள் சிதறிவிடுகின்றன.. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணிவருகிறது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலாவட்டம் என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் கூலித் தொழிலாளி சரண்.. இவருக்கு 24 வயதாகிறது.

இவரது வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வருபவர் மதுமிதா.. பக்கத்து வீடு என்பதால், சரணும், 19 வயது மதுமிதாவும் நட்பாக பழகி வந்தனர். பிறகு இந்த நட்பு காதலாக வளர்ந்தது..
பக்கத்து வீட்டு பெண்ணுடன் காதல்
ஆனால் இவர்களின் காதல் இரு குடும்பத்தினருக்குமே தெரிந்துவிட்டது.. அத்துடன் காதலுக்கு எதிர்ப்பையும் தெரிவித்தனர். எனினும், ஒருவரையொருவர் பிரிந்து விடக்கூடாது என்பதில் காதல் ஜோடி உறுதியாக இருந்தது.
பெற்றோர்களின் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெறாது என்பதை உணர்ந்து கொண்ட காதல் ஜோடி என்ன செய்வதன்றே தெரியாமல், வீட்டை விட்டு வெளியேறி 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்... பிறகு சரணும், மதுமிதாவும் மதுராந்தகம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்களது வாழ்க்கையை துவங்கினர்..
இந்த 4 மாத காலமாகவே புது மண தம்பதி இருவரும் மகிழ்ச்சியாகவே மண வாழ்க்கையை நடத்தி வந்தனர்.. இந்நிலையில், சந்தேகம் பேய் சரண் மனதில் குடியேறிவிட்டது.
போனில் யாரு மதுமிதா
சமீப காலமாகவே மதுமிதா யாருடனோ போனில் பேசிக் கொண்டேயிருந்துள்ளார்.. இது சரணுக்கு சந்தேகத்தை தந்து வந்துள்ளது.. இப்படி போனில் மணிக்கணக்காக பேசவேண்டாம் என்று மதுமிதாவை எச்சரித்து வந்துள்ளார்..
ஆனால், நேற்றைய தினமும் மதுமிதா, செல்போனில் வேறு ஒரு நபருடன் பேசி கொண்டிருந்தாராம். மதுமிதா பேசுவதை பார்த்து சந்தேகப்பட்ட சரண், 'போனில் யார்? இவ்வளவு நேரம் பேசுகிறாயே? என்று கேட்டிருக்கிறார்..
அதற்கு மதுமிதா, "தெரிந்தவர்தான்" என்று பதிலளித்துள்ளார்.. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சரண், மதுமிதாவிடம் மீண்டும் அந்நபர் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். சிறிது நேரத்தில் தம்பதி இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. ஒருகட்டத்தில் இருவருமே சண்டை போட்டு அமைதியாகிவிட்டார்கள்..
ஆனாலும், மதுமிதா போனில் பேசியது யாரிடம்? என்ற கேள்வி சரண் மனதை அரித்து கொண்டேயிருந்தது.. இறுதியில் மதுமிதாவை கொலை செய்துவிடுவது என்று சரண் முடிவு செய்தார்.
மலைப்பகுதியில் காதல் மனைவி
இதற்காக நேற்று சாயங்காலம் மதுமிதாவை சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினார்.. பிறகு அனந்தமங்கலம் கிராம கோயிலுக்கு போயிட்டு வரலாம் என்று கூறி நைசாக அழைத்துள்ளார்.. இதனை நம்பிய மதுமிதாவும், கணவருடன் அந்த கோயிலுக்கு சென்றுள்ளார்.. அங்கே தம்பதி சுவாமி தரிசனம் செய்து முடித்தனர்.
பிறகு சரண், அருகிலுள்ள மலைப் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு வரலாம் என்று சொல்லி உள்ளார்.. மதுவுமிதாவும் சரணுடன் ஆசையாக சென்றுள்ளார்.. அந்த மலைப்பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு, இருவரும் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர்.
பேசிட்டே இருந்த கணவர்
அந்த நேரத்தில், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த சரண், மதுமிதாவின் கழுத்தை சரமாரியாக அறுத்துவிட்டார்.. இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து அலறி துடித்தார் மதுமிதா.. ஆனால், அது மலைப்பகுதி என்பதாலும், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததாலும், மதுமிதாவின் அலறல் சத்தம் யாருக்குமே கேட்கவில்லை..
இதனால் சம்பவ இடத்திலேயே மதுமிதா துடிதுடித்து இறந்துவிட்டார்.. பிறகு சரண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் கிராம மக்கள் அந்த வழியாக சென்றபோதுதான், பெண் ஒருவர் கொலையாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒரத்தி போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்..
காதல் மனைவி
போலீசாரும் மலைப்பகுதிக்கு விரைந்து வந்து மதுமிதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையையும் துவங்கினர்.. அப்போதுதான் மதுமிதாவை கொன்றது கணவர் சரண் என்பது உறுதியானது.. பிறகு தீவிரமாக சரணை தேட ஆரம்பித்தனர்..
ஆனால், அந்த பகுதியிலேயே சரண் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை பார்த்து, அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. தற்போது சரணிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. காதல் மனைவியிடம் பேசிட்டே இருந்தவர், திடீரென அவரை கொலை செய்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
குடும்ப வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், இதற்கு அடிப்படையாக காரணமாக இருந்து வருவது கள்ளக்காதல்.. அதேபோல சந்தேகத்தினால் ஏற்படும் வன்முறைகளாலும் குடும்பங்கள் சிதறிவிடுகின்றன.. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டு பண்ணிவருகிறது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications