செங்கல்பட்டில் ஜாம் ஆன எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. திணறிய தென்மாவட்ட மக்கள்! காலை வாரிய ரயில்வே துறை
சென்னை: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் உள்ளிட்ட பயணிகள் ரயில்கள் நிறுத்தி வைக்கபட்டதால், தென் மாவட்ட மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
ஒட்டிவாக்கம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் செங்கல்பட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன. விழுப்புரம் பாசஞ்சர், பாண்டிச்சேரி விரைவு ரயில், செங்கோட்டை விரைவு ரயில், சேது விரைவு ரயில் உள்ளிட்டவை நீண்ட நேரம் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

திங்கட்கிழமை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) இரவு 11.35 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல, தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 17 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06013) மறுநாள் காலை 7.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த ரயில் (எண்:06014) அக்.20 ஆம் தேதி திங்கள்கிழமை இரவு 8.45 மணிக்குப் புறப்படும். மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்ட இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை என்பதே உண்மை. போதுமான ரயில்கள் இல்லாததால் எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. ரயிலில் கழிவறைக்கு பக்கத்தில், பொருட்கள் வைக்கும் இடம் என கிடைக்கும் இடங்களில் அமர்ந்து மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக பயணிகளிடையே லேசான சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்த சிரமங்களுக்கு இடையே பயணிகள், பயணத்தை தொடர்ந்த நிலையில், ரயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, பயணிகளுக்கும் மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இதுபோன்ற பண்டிகை நாட்களில் சிக்னல் கோளாறு ஏற்படாதவாறு முன்கூட்டியே பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மீறி பழுது ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications