செம்பரம்பாக்கம் மட்டுமல்ல.. சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாக காரணமான ஏரிகள்
சென்னை: காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்ட எல்லையில் கடல் போல் பரந்து விரிந்து கடக்கும் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமே அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாக காரணமல்ல.. அடையாறு ஆறுக்கு நீர் பிடிப்பு பகுதிகளின் எல்லை மிகப்பெரியது ஆகிறது. குறிப்பாக சொல்வது என்றால், மறைமலை நகர் முதல் தாம்பரம் வரை உள்ள பல ஏரிகள் தான் அடையாற்றில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமல்ல.. செங்கல்பட்டு மாவட்டத்தின் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகளின் உபரி நீர், இறுதியாக அடையாறு ஆற்றில்தான் கலக்கிறது. மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகள் தெற்கிலிருந்து வடக்காக அமைந்துள்ள தொடர்ச்சியான நீர்வழிக் கட்டமைப்பின் பகுதிகள் அடையாறு நோக்கி செல்கின்றன. இன்னும் தெளிவாக சொல்வது என்றால், ஒரக்கடம் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள பகுதிகளும், மறைமலைநகர் முதல் கூடுவாஞ்சேரி, முடிச்சூர் வரை உள்ள பகுதிகளிலும் பெய்யும் மழை நீர் அந்த பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்புகிறது. அதன்பின்னர் அப்படியே ஒன்றோடு ஒன்று இடிந்து அடையாற்றில் இருக்கிறது.

மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, காவனூர் போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கும் குளங்களுக்கும் வரும் உபரி நீர், கால்வாய்கள் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு, தாம்பரத்திற்கு வடக்கே உள்ள பெரிய நீர்த்தேக்கமான நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரியை வந்தடைகிறது. இந்தப் பகுதிகள் அனைத்தும் அடையாறு ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் ஒரு பகுதியாகும் . கூடுவாஞ்சேரி ஏரி (நந்திவரம் ஏரி) முழு கொள்ளளவை எட்டிய பிறகு, அதன் உபரி நீர் ஏரிக்கான பிரத்யேக வடிகால் கால்வாய் வழியாக வெளியேறுகிறது.
இந்த உபரி நீர், ஊரப்பாக்கம், ஆதனூர், மண்ணிவாக்கம் போன்ற பகுதிகளைக் கடந்து, முடிச்சூரில் அடையாறு ஆற்றுடன் சென்று கலக்கிறது. தாம்பரம் நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள முடிச்சூர், வரதராஜபுரம் போன்ற இடங்களைக் கடந்து செல்லும் போது அடையாறு ஆற்றுடன் இணைகிறது. மறைமலைநகர் தொடங்கி கூடுவாஞ்சேரி வரையிலான ஏரிகளின் உபரி நீர், கால்வாய்கள் வழியாக முடிச்சூர்-தாம்பரம் பகுதிக்கு அருகே அடைந்து, அங்கிருந்து அடையாறு ஆற்றில் கலந்து இறுதியாகச் சென்னையின் பட்டினப்பாக்கம் அருகே வங்கக் கடலில் கலக்கிறது எனவே செம்பரம்பாக்கம் மட்டுமே வெள்ள பாதிப்புக்கு காரணமாக இருப்பதில்லை..
மாறாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீர் தான் அடையாற்றில் ஏற்படும் வெள்ள பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது. பெரும்பாலான ஏரிகள் கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையால் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. உபரி நீர் கூடுவாஞ்சேரி ஏரிக்கு செல்கிறது. அதுவும் நிறைந்து வருவதால், அடையாறுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரம் அச்சப்படும் அளவுக்கு நிலைமை இப்போது இல்லை.












Click it and Unblock the Notifications