ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால் வந்த வினை.. சென்னை பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சென்னை: ஈர கையுடன் செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எர்ணாவூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முகுந்தன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் இவர்களுக்கு அனிதா (14), எழில்மதி (7) என இரு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் அனிதா (14) எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை அனிதா வீட்டில் இருந்த போது ஈரக் கையுடன் செல்போனை சார்ஜ் போடும் போது மின்சாரம் தாக்கி கீழே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அனிதாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஈரக் கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்டதால், மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செல்போன் சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும், சார்ஜ் போட்டுக்கொண்டே பேசக் கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications