ராத்திரி நேரம்.. பஸ் முன்னாடி வந்து நின்ற 21 வயது பெண்.. திடீர்னு செய்த காரியம்.. வெலவெலத்த டிரைவர்
சென்னையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இளம்பெண் கைதானார்
சென்னை: சென்னையில் இரவு நேரம், பஸ்ஸை ஓட்டி சென்று கொண்டிருந்த டிரைவருக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்து கிடந்தது..!
கடந்த டிசம்பர் மாதம் திண்டுக்கல்லில் ஒரு சம்பவம் நடந்தது.. வேடசந்தூர் அருகே ஈரோட்டிலிருந்து மதுரையை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.. அதில் 50 பயணிகள் இருந்தனர்.
கரூரைச் சேர்ந்த சாந்தி என்பவர் அந்த பஸ்ஸில் வந்தார்.. அவருடன் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி அணிந்த நபர் ஒருவரும் கூடவே வந்தார்.. அவர் சாந்தி வீட்டு தோட்டக்காரராம்.

கெட்ட வார்த்தைகள்
சாந்தியும் குடிபோதையில் இருந்தார்.. தோட்டக்காரரும் குடிபோதையில் இருந்தார்.. கரூரில் பஸ் ஏறியதில் இருந்தே 2 பேருமே கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசியபடி வந்துள்ளனர்.. அதுவும் சத்தமாக பேசவும், பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இருவரையும் அமைதியாக வரும்படி சிலர் எச்சரித்தனர்.. ஆனால் சாந்தியோ, ஆண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி கொண்டே, கால்களால் எட்டி உதைக்க பாய்ந்தார்.

சாந்தி
கடைசியில் டிரைவர் வேறு வழியில்லாமல் வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கே பஸ்ஸை ஓட்டி சென்று, சாந்தியை ஒப்படைத்தார். இப்போதும் ஒருசம்பவம் அதுபோலவே நடந்துள்ளது.. இது நம் தமிழகத்தின் தலைநகரில் நடந்துள்ளது.. சென்னை பாரிமுனையில் இருந்து இரவு நேரம், மாநகர பேருந்து ஒன்று கொரட்டூர் நோக்கி புறப்பட்டது. நைட் நேரம் என்றாலும் பயணிகள் நிறைய பேர் அதில் இருந்தனர்.. பஸ் பட்டாளம் ஸ்டாரன்ஸ் ரோடு வழியாக சென்றபோது, அங்கு பிளாட்பாரத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்தார்..

இளம்பெண்
அவருக்கு 21 வயதிருக்கும்.. பஸ் வருவது தூரத்தில் பார்த்ததுமே, அதை கைகளை காட்டி நிறுத்தினார்.. அதனால் டிரைவரும் பஸ்ஸை நிறுத்தினார். அந்த பெண்ணோ, பஸ்ஸை நோக்கி வந்தார்.. ஆனால் பஸ்ஸில் ஏறாமல், திடீரென கீழே கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து பஸ் மீது எறிந்தார்.. இதில், பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக நொறுங்கி உடைந்தது.

பிளாட்பாரம்
இதை பார்த்து டிரைவர், கண்டக்டர், பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக ஓட்டேரி போலீசுக்கும் தகவல் சொன்னார்கள்.. போலீசார் விரைந்து வந்து அந்த இளம்பெண்ணை பிடித்து வீடு எங்கே என்று விசாரித்தனர்.. அப்போதுதான் அந்த பெண்ணுக்கு வீடு எதுவுமே இல்லை என்பதும், அம்பத்தூர் ரயில்வே பிளாட்பாரத்தில்தான் எப்போதுமே வசித்து வருவதும் தெரியவந்தது.

வேளாங்கண்ணி
இந்த பெண்ணின் பெயர் வேளாங்கண்ணி.. தண்ணி அடித்திருந்தார்.. இந்த பஸ் ஸ்டேண்டுக்கு எப்படி வந்தார், யாராவது அழைத்து வந்து இங்கு வந்து விட்டு சென்றார்களா? என்றெல்லாம் தெரியவில்லை.. விமது போதையில் என்னென்னவோ உளறியதை அடுத்து, மேலும் விசாரிக்க போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. அதற்கு பிறகுதான் டிரைவர் பஸ்ஸை எடுத்து கொண்டு கிளம்பினார்... இந்த சம்பவத்தினால், ஓட்டேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது..












Click it and Unblock the Notifications