காதலிப்பதாக கூறி ஜாலியாக இருந்து விட்டு.. ஏமாற்றிய வாலிபர்.. ஆள் வைத்துக் கடத்திய பெண்ணின் தாயார்!
சென்னை: காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த மகளின் காதலனை கடத்திய 40 வயது பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (25), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளார்.
கிருஷ்ணராஜ் தன்னுடன் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண்ணை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். இருவரும் பலமுறை டேட்டிங் சென்று உற்சாகமாக இருந்துள்ளனர்..

ஆசைவார்த்தை
ஓராண்டாக காதலியுடன் பல இடங்களில் பலமுறை சுற்றிய கிருஷ்ணராஜ், காதலியை திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். இதனால் மகிழ்ச்சி அடைந்த காதலி, இருவரும் பெற்றோரை சந்தித்து பேசி திருமண தேதியை முடிவு செய்வோம் என கூறியுள்ளார்.

விலகிய காதலன்
காதல் ஜோடிகள் இருவரும் காதலர்களாக இருந்தவரை எந்த பிரச்னையும் வரவில்லை. திருமணம் செய்யலாம் என காதலி முடிவு செய்த பின், கிருஷ்ணராஜ் காதலியின் போன் கால்களை எடுக்க மறுத்தார். காதலியையும் தவிர்க்க ஆரம்பித்தார். உன்னுடைய நடவடிக்கைகள் எனக்கு பிடிக்கவில்லை.இருவரும் சேர்ந்த வாழவேண்டாம். பிரியலாம் என கிருஷ்ணராஜ் கூறியுள்ளார். இதை கேட்டு காதலி அதிர்ச்சி அடைந்தார்.

அம்மாவிடம் முறையீடு
இதனிடையே ஏன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என காதலி கேட்ட போது கிருஷ்ணராஜ், என் உடன் பணிபுரியும் நண்பர்கள் உன்னை திருமணம் செய்ய வேண்டாம் என்கிறார்கள் என கூறியுள்ளார். இதனால் வேதனை அடைந்த காதலி தன் அம்மா கவிதாவிடம் நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.

காதலனை கடத்த முடிவு
மகளின் இந்த காதல் கதையை கேட்டு ஆத்திரமடைந்த கவிதா, மகளின் காதலன் கிருஷ்ணராஜை கடத்திச்சென்று மிரட்டி, மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு அவரது உறவினர்கள் ஹரி கிருஷ்ணன் 25 வயது, சங்கர் குமார் 28வயது, ஆகியோர் உதவி செய்ய முன்வந்தனர்.

காதலன் கடத்தல்
மகளை வைத்து காதலனிடம் பேச வைத்த கவிதா, கடைசியாக ஒரு முறை வா, இருவரும் ஒன்றாக கோயிலில் சந்தித்து பேசலாம். அதன் பிறகு நீ உன்வழியில் செல் என அழைக்க வைத்துள்ளார். அதன்படி மகளும் அழைத்துள்ளார். இதை நம்பி தனது நண்பரும் வழக்கறிஞருமான வசந்தகுமாருடன் இணைந்து கிருஷ்ணராஜ் காதலி சொன்ன இடத்துக்கு வந்துள்ளார். அப்போது காதலியுடன் கிருஷ்ணராஜ் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த கவிதா மற்றும் இரண்டு இளைஞர்களும் கிருஷ்ணராஜை அடித்து மிரட்டி காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

விரைந்து வந்த போலீஸ்
நண்பன் கடத்தப்படுவதை அறிந்த வழக்கறிஞர் வசந்த குமார் திருவொற்றியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து மணலி அருகே போலீசார் காரை மடக்கினர். அதில் இருந்த கிருஷ்ணராஜை மீட்ட போலீசார், கவிதா, சங்கர் குமார், ஹரி கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications