குல்லா அணியக்கூடாது! சென்னையில் முஸ்லீம் சிறுவனுக்கு நடந்த கொடூரம்! பொங்கி எழுந்த மக்கள்! என்னாச்சு
சென்னை: சென்னையில் இஸ்லாமிய சிறுவன் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் குல்லா ஒரு கேடா என்று கேட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கண்ணதாசன் தெருவில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. 12 வயது சிறுவன் அங்கே உள்ள மசூதியில் தொழுகை நடத்த சென்று இருக்கிறார்.
அதன்பின் மாலை தொழுகை முடித்துவிட்டு அந்த சிறுவன் அரபி வகுப்பிற்கு சென்றுள்ளார்.

சென்னை
தினமும் அவர் அரபி வகுப்பிற்கு செல்வது வழக்கம். அதேபோல் அன்று அரபி வகுப்பிற்கு சென்றுள்ளார். தொழுகை, அரபி வகுப்பு எல்லாம் முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் அந்த சிறுவன் தனியாக சைக்கிளில் வந்துள்ளார். தினமும் அவர் அந்த சாலை வழியாக்கத்தான் திரும்பி வருவார் என்று கூறப்படுகிறது. அப்போது அந்த சாலையில் ஆட்கள் யாரும் இல்லை. அவரின் எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென அந்த சிறுவனின் சைக்கிளை மறித்துள்ளார்.

அரபி வகுப்பு
சிறுவன் சைக்கிளின் முன் பக்கம் கை வைத்து அதை நகர விடாமல் தடுத்துள்ளார். ஏய் எங்கே செல்கிறாய் என்பது போல கேட்டு, அவரிடம் சண்டைக்கு செல்வது போல கத்தி உள்ளார். அந்த சிறுவன் எதுவுமே செய்யாத போதும் வேண்டும் என்றே இந்த மர்ம நபர் சண்டைக்கு செல்வது போல் சென்றுள்ளார். அவருக்கு நடுத்தர வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் கோபமாக இருந்துள்ளார்.

சிறுவன்
அந்த சிறுவனை முறைத்து பார்த்து.. ஏய் உனக்கு குல்லா ஒரு கேடா என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவன் அங்கிருந்து சைக்கிளில் வேகமாக ஓடி தப்பி சென்றார். இதையடுத்து அசோக் காவல் நிலையத்தில் அவரின் பெற்றோர் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதி இஸ்லாமியர்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து போலீசார் உடனே விசாரணையில் குதித்தனர். அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி
இந்த சோதனையில், அந்த மர்ம நபருக்கு 40 வயது இருக்கும் என்று தெரிய வந்தது. அவரை முழுமையாக அடையாளம் காண முடியவில்லை. குறுகலான சாலையில் எதிரே அந்த இஸ்லாமிய சிறுவன் வந்ததும், அவரின் சைக்கிளை இந்த நபர் இடிப்பது போல சென்று இருக்கிறார். அப்போது கோபத்தில் அவர் குல்லா ஒரு கேடா என்று கத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications