Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவளத்தில் பீஸ் பீஸ்ஸாக வெட்டி புருஷனை புதைத்த பாக்யா.. சிறையில் அடைப்பு.. உதவியவர்கள் எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கரை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டை விரைந்து உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 29 வயதாகும் ஜெயந்தன் கடந்த 5 ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு விமான நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் என்.ஜி.ஓ. சாலையில் உள்ள தனது சகோதரி ஜெயகிருபா வீட்டில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளார் ஜெயந்தன்.

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி மதியம் நங்கநல்லூரில் உள்ள தனது அக்கா ஜெயகிருபா வீட்டில் இருந்து வேலைக்காக சென்னை விமான நிலையத்துக்கு ஜெயந்தன் புறப்பட்டு சென்றார். அவர் வேலைக்கு போகும்போதே, பணி முடிந்ததும், அப்படியே சொந்த ஊரான விழுப்புரம் போய்விட்டுதான் வருவேன் என்று தன் அக்காவிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.

Chennai airline employee murder case: Pudukottai beauty now jailed in puzhal

ஆனால் அதன்பிறகு ஜெயந்தன் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. அவரது சொந்த ஊருக்கும் போகவில்லை. தன் வீட்டுக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா, செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால் ஜெயந்தனின் செல்போன் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பழவந்தாங்கல் போலீசில் தனது தம்பி ஜெயந்தனை காணவில்லை என்று புகார் செய்தார். அதன்பேரில் பழவந்தாங்கல் போலீசார், ஜெயந்தன் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தார்கள். ஜெயந்தனின் செல்போன் சிக்னல் போன்றவைகளை வைத்து ஆய்வு நடத்தியபோது கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் செம்மாளம்பட்டி கிராமத்தை காட்டியது.

விசாரணையில் திடுக்: போலீஸ் விசாரணையில் ஜெயந்தன் கடைசியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலவாயல் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (38) என்ற பெண்ணிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 1-ந் தேதி புதுக்கோட்டை சென்று பாக்கியலட்சுமியை பிடித்து விசாரித்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள அந்த பெண், முதலில் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுத்திருக்கிறார். போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஜெயந்தனை கொலை செய்து விட்டதாக கூறியிருக்கிறார்.

மேலும் ஜெயந்தனின் உடலை துண்டு துண்டாக வெட்டி கூறு போட்டு கடந்த மாதம் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் கட்டைப்பை, சூட்கேஸ் ஆகியவற்றில் உடல் துண்டுகளை எடுத்துச்சென்று செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரை அருகே குழிதோண்டி புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை ஜெயலட்சுமி கூறியிருக்கிறார். இந்த கொலைக்கு, தனக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த சங்கர், கோவளத்தை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் பாக்யலட்சுமி கூறியிருக்கிறார்.

Chennai airline employee murder case: Pudukottai beauty now jailed in puzhal

எப்படி பழக்கம்: இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜெயந்தன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளார். அப்போது பாலியல் தொழில் செய்து வரும் அழகி பாக்கியலட்சுமி அறிமுகமாகி உள்ளார். பின்னர் ஜெயந்தன் அவருடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் ஜெயந்தன் கடந்த 2020-ம் ஆண்டு பாக்கியலட்சுமியை விழுப்புரத்தில் உள்ள மயிலம் கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் திடீரென இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாக்கியலட்சுமி ஜெயந்தனை விட்டு பிரிந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்று வாழ்ந்து வந்தார்.

கோவளத்தில் உடல்: இதற்கிடையே கடந்த மாதம் 18-ந்தேதி புதுக்கோட்டை சென்ற ஜெயந்தன் பாக்கியலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்திருக்கிறார். இதற்கு பாக்கியலட்சுமி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பாக்கியலட்சுமி தனது ஆண் நண்பர் சங்கருடன் சேர்ந்து ஜெயந்தனை அடித்து கொலை செய்திருக்கிறார்.பின்னர் அவரது கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி பாலித்தீன் கவரில் சுருட்டி கட்டைப்பையில் வைத்து கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி அதிகாலை பேருந்து மூலம் சென்னை கோவளம் கடற்கரைக்கு வந்து புதைத்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை சென்றுள்ளார்.

அதன்பின்னர் கடந்த 26-ந்தேதி தலை மற்றும் வயிற்றுப்பகுதியை வெட்டி பாலிதீன் கவரில் சுருட்டி சூட்கேசில் வைத்து கொண்டு வாடகை காரில் மீண்டும் கோவளத்திற்கு வந்தார். அங்கு தனக்கு பழக்கமான கோவளத்தை சேர்ந்த பூசாரி வேல்முருகன் என்பவரை வரவழைத்து இருசக்கர வாகனத்தில் சென்று கோவளம் பகுதியில் மற்ற உடல் பாகங்களை புதைத்து விட்டு சென்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Chennai airline employee murder case: Pudukottai beauty now jailed in puzhal

குழப்பம்: விசாரணைக்கு பிறகு பாக்கியலட்சுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார், கொலை நடந்த இடம் புதுக்கோட்டை என்பதால் யார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்? என்பதில் போலீசார் இடையே இழுபறி ஏற்பட்டு வந்தது. உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவின்பேரில் தற்போது பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் அமீர் அகமது தலைமையில் போலீசார் கோவளத்தில் சோதனை செய்து, அங்குள்ள பூமிநாதர் கோவில் அருகில் உள்ள குளத்தில் கல்லை கட்டி பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வீசப்பட்ட விமான நிறுவன ஊழியர் ஜெயந்தன் தலை மற்றும் உடல் பாகங்களை சுமார் 20 நாட்களுக்கு பிறகு எலும்பு கூடாக மீட்டார்கள்.

சிறையில் அடைப்பு: இதையடுத்து ஜெயந்தனை கொலை செய்ததாக அழகி பாக்கியலட்சுமியை கைது செய்த போலீசார், அவரை ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பாக்கியலட்சுமி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பாக்கியலட்சுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவளத்தைச் சேர்ந்த பூசாரி வேல்முருகனை அழைத்து பழவந்தாங்கல் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், "சென்னைக்கு பாக்கியலட்சுமி வரும்போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரது அழகில் மயங்கி இந்த கொலைக்கு உதவினேன். என்னிடம் கொடுத்த ஜெயந்தனின் உடல் பாகத்தை கோவில் குளத்தில் வீச யோசனை கூறினேன். உடலை மீட்க உதவி செய்வதாக" போலீசாரிடம் கூறினார். இதனால் அவரை போலீசார் அனுப்பிவைத்ததாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு பூசாரி வேல்முருகன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கரை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டை விரைந்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+