பூந்தமல்லி முதல் பரந்தூர் வரை கவனிச்சீங்களா? சென்னை மீனம்பாக்கத்தில் ஸ்பீடு எடுத்த மெட்ரோ ரூட்
சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் தடம் அமைக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வழித்தடங்கள்: அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் - விம்கோ நகர், சென்ட்ரல் - பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, மெட்ரோ ரயிலின் சேவையானது, தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதன் தேவைகளும் அதிகரித்தவாறே உள்ளது. எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, சென்னையில் அனைத்து முக்கிய பகுதிகளையும் இணைக்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம்: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பணிமனை, மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சுமார் ரூ.63,246 கோடி செலவில், 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2ம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தையும் வரும் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பணிகள் நடைபெறும் 3 வழித்தடங்களையும் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தை பரந்தூர் வரை 43 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டது.
விரிவான அறிக்கை: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரையும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிக்கதிட்டமிட்டு, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க 2 நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது, கோயம்பேடு - ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரைட்ஸ் (RITES) நிறுவனத்திடமும், பூந்தமல்லி - பரந்தூர் வரையான மெட்ரோ ரயில் தடம்தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
பூந்தமல்லி: இதையடுத்து, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்துக்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணி ஆரம்பமாகியிருக்கிறது. , குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்கள் வழியாக செல்ல ஆய்வு நடைபெறுகிறது.
மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் குரோம்பேட்டை வழியாக பூந்தமல்லி வரை கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வழித்தடம் தோராயமாக 15 கிலோ மீட்டரை உள்ளடக்கியது. இந்த ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமானது, ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம்: இந்நிலையில் பூந்தமல்லி முதல் பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையத்துடன்அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
எனவே, மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்துக்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வழித்தடத்துக்கு குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்கள் வழியாகசெல்ல ஆய்வு நடைபெறுகிறது.
ஒப்படைப்பு: இந்த புதிய வழித்தடம் சுமார்15 கி.மீ. உள்ளடக்கியது. இதற்கானசாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமும் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கையும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோவழித்தடத்துக்கு விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும், வரும் வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்க முடிவாகியிருக்கிறது.
வசதிகள்: இந்த திட்டங்கள் நடந்து முடியும்தருவாயில், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு ஒரு மணி நேரத்திலேயே சென்றடைய முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications