பரந்தூர் இருக்கட்டும்.. சென்னை ஏர்போர்ட்டில் கலக்கல் மாற்றம்! இது மட்டும் நடந்தால் மொத்தமாக மாறிடும்
சென்னை: சென்னையில் பழைய சர்வதேச முனையம் இடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கே புதிதாக என்ன அமைய உள்ளது என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது
சென்னையில் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இடநெருக்கடி இருப்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகச் சர்வதேச சரக்கு போக்குவரத்து பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிகமாகச் சென்று கொண்டு இருக்கிறது. எனவே, அதை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வர புதிய விமான நிலையம் அவசியமாகிறது.

இருப்பினும், அந்த புதிய விமான நிலையம் அமையக் குறைந்தது 4, 5 ஆண்டுகள் ஆகும் என்பதால் அதற்குள் ஏற்கனவே இருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டை விரிவாக்கம் செய்யும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
ஏர்போர்ட்: கடந்தாண்டு தான் மீனம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கிடையே சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் இப்போது புதிய கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த புதிய கட்டுமானம் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதைச் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
தற்போது இருக்கும் ஒருங்கிணைந்த முனையத்திற்கு அருகே உள்ள பழைய சர்வதேச முனையக் கட்டிடம் அமைந்திருந்த இடத்தில் இந்த புதிய முனையம் வர உள்ளது. பழைய சர்வதேச முனையக் கட்டிடம் இடிக்கப்பட்டு ஒப்பந்ததாரரிடம் ஏற்கனவே தரப்பட்டுள்ள நிலையில், புதிய முனையத்தின் கட்டுமானம் இம்மாதம் தொடங்கும் என இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒருங்கிணைந்த முனையம்: சுமார் 60,000 சதுர மீட்டர் பரப்பளவில் இதன் கட்டுமானம் அமையும் நிலையில், அது முடிந்தவுடன் தற்போதுள்ள ஒருங்கிணைந்த டி2 முனையத்துடன் இணைக்கப்பட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களைக் கையாளக்கூடிய ஒரு பெரிய ஒருங்கிணைந்த கட்டிடம் சென்னை ஏர்போர்ட்டிற்கு கிடைக்கும். இந்த கட்டுமானம் முடிந்த உடன், ஒருங்கிணைந்த முனையத்திற்கு இரண்டு பக்கமும் இரண்டு உள்நாட்டு முனையங்கள் இருக்கும்.
இந்த புதிய கட்டுமானம் முடிந்தால் சென்னை ஏர்போர்ட்டின் ஒருங்கிணைக்கப்பட்ட முனையத்தின் மொத்த அளவை 197,000 சதுர மீட்டராக உயரும். தற்போது சென்னை ஏர்போர்ட் ஒரு ஆண்டிற்கு 2.5 கோடி பேரைக் கையாளும் நிலையில், அந்த எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்கும்.
டெர்மினல்: இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், "டெர்மினலை நெகிழ்வான முறையில் பயன்படுத்தவே இந்த யோசனை. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கையாளும் வசதி இருக்கும். உள்நாட்டில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இந்த கட்டிடத்தை அதற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்" என்றார்.
இந்த விமான நிலையம் ஒரு நாளைக்கு சுமார் 50,000 உள்நாட்டுப் பயணிகளைக் கையாளுகிறது. குறிப்பாக பீக் ஹவர்ஸ், பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் உள்நாட்டு விமானங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஏர்போர்ட் பெரியதாக இல்லை என்பதால் விமான நிறுவனங்களால் புதிய ஸ்லாட்களை சேர்க்க முடிவதில்லை. இந்த கட்டுமான பணிகள் முடிந்தால் விமான நிறுவனங்களால் கூடுதலாக ஸ்லாட்களை சேர்க்க முடியும்.
மேலும், இந்த கட்டுமானம் முழுமையாக முடிந்த உடன் பயணிகள் ஏறி இறங்க அதிக ஏரோபிரிட்ஜ்களும் அமையும். இது குறுகிய காலத்தில் விமானங்கள் வந்திறங்கவும் கிளம்பவும் உதவும்.. இதில் பேக்கேஜ்களை பணிகளே டிராப் செய்ய ஒரு மையம், பயணிகளை கண்காணிக்கத் தனியாக ஒரு அமைப்பு, இ-கேட்கள் மற்றும் போர்டிங்கிற்கான 3D சென்சார்கள், ஒரு பிரத்யேக பேக்கேஜ் ஸ்கேனிங் அமைப்பு எனப் பல அதிநவீன வசதிகள் அதில் இடம்பெற்று இருக்கும்.












Click it and Unblock the Notifications