864 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் "திமிங்கலம்".. சென்னையில் இறங்கிய வினோத விமானம்.. சுவாரசிய பின்னணி
சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய ஒன்று பயணிகள் இடையிலும், மக்கள் இடையிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பார்க்கவே வித்தியாசமான தோற்றம் கொண்ட அந்த விமானத்தின் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
86,500 கிலோ எடை.. 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன்.. சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்ற கூடிய ராட்சச விமானம்தான் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் பெலுகா. பார்க்க அப்படியே வெள்ளை நிற திமிங்கலம் போல பெரிய மூக்கு கொண்டதுதான் இந்த விமானம்.
இந்த விமானத்திற்கு ஏன் இந்த பெலுகா என்ற பெயர் வைக்கப்பட்டது என்று பார்க்கும் முன் இதன் சிறப்பம்சத்தை பார்த்து விடுவோம்.

திமிங்கலம்
பார்க்க ராட்சச திமிங்கலம் போல காட்சி அளிக்கும் இந்த பெலுகா விமானம் ஒரு சரக்கு விமானம் ஆகும். இதன் மூக்கிற்கு மேல் பகுதி வீங்கி காணப்படும். விமானங்களில் எதிர் திசை அழுத்தத்தை டிராக் என்று அழைப்பார்கள். இதுதான் விமானம் தரையிறங்க உதவும். அதுவே விமானம் பறக்க உதவ கூடிய கீழிருந்து மேல் நோக்கி செல்லும் அழுத்தத்தை லிப்ட் என்பார்கள். இந்த விமானத்தின் டிராக்கை குறைத்து.. லிப்டை அதிகரிக்கவே இந்த திமிங்கலம் போன்ற வடிவமைப்பு இதற்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இதன் மூக்கு புடைப்பாக இருக்க பின் வேறு ஒரு காரணமும் இருக்கிறது.. தொடர்ந்து படியுங்கள்..

சரக்கு விமானம்
வெள்ளை நிறத்தில் ராட்சச தோற்றம் கொண்ட இதில் 2 பேர் மட்டுமே பயணிக்க முடியும். ஆம் இரண்டு பைலட்டுகளை விட வேறு யாரும் இதில் பயணிக்க மாட்டார்கள். மற்றபடி இது முழுக்க முழுக்க சரக்கு ஏற்றி செல்லும் விமானம்தான். அதிலும் விமானத்தில் பைலட்டுகள் இருக்க கூடிய காக் பீட் கூட மிக சிறியதாக இருக்கும் அமைப்பு கொண்டது. குட்டி விமானம் ஒன்றை உள்ளே வைத்தது போல இதை காக் பீட் இருக்கும். அதை தேவையான நேரங்களில் கழற்றவும் முடியும்.

எடை
எரிபொருள் இல்லாமலே 86,500 கிலோ எடை கொண்டது ஆகும். இந்த விமானம். 864.36 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இந்த விமானம், . சராசரியாக 150 டன் வரை சரக்கு ஏற்ற கூடிய திறன் கொண்டது. ஏர்பஸ் பெலுகா 56.15 மீட்டர் நீளம், 44.84 நீள இறக்கைகள், கொண்டது ஆகும். இந்த விமானம்தான் நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. சென்னைக்கு எந்த சரக்கையும் இறக்குமதி செய்ய விமானம் வரவில்லை.

வேடிக்கை பார்த்தனர்
எரிபொருள் நிரப்புவதற்காக வந்துவிட்டு.. இன்று அதிகாலை ஒன்றரை மணிக்கு மீண்டும் விமானம் டேக் ஆப் செய்தது. நேற்று முழுக்க சென்னை விமான நிலையத்தில் இருந்த ஏர்பஸ் பெலுகா விமானம் அங்கு இருந்த ஊழியர்களை கவர்ந்தது. விமான பணியாளர்கள், ஏன் சில விமானிகள் கூட இந்த ஏர்பஸ் பெலுகா விமானத்தை வந்து "சைட்" அடித்துவிட்டு சென்றனர்.

லோட் இல்லை
சிங்கப்பூர் நோக்கி சென்ற இந்த விமானம்.. வேறு ஒரு லோடை முடித்துவிட்டு.. எந்த சரக்கும் இல்லாமல் மீண்டும் சிங்கப்பூர் நோக்கி திரும்பி சென்றுள்ளது. இடையில்தான் சென்னையில் எரிபொருள் நிரப்பி இருக்கிறது. சென்னையில் முதல்முறை இந்த ராட்சச ஏர்பஸ் பெலுகா விமானம் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. ஏர்பஸ் பெலுகா விமானம் டேக் அப் மற்றும் லேண்டிங்கின் போது அதிக ஒலி எழுப்பும்.. நேற்றும் இந்த விமானம் தரையிறங்கிய போது அதிக சத்தம் வந்தது.

விமானம் வடிவமைப்பு
சரி இதன் மூக்கு வீங்கி இருக்க இன்னொரு காரணம் இருக்கிறது என சொன்னேனே அது என்ன தெரியுமா? விமானத்தில் அதிக சரக்குகளை ஏற்றுவதற்கு இடம் கொடுக்கும் விதமாக மூக்கு அப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் உள்ளே குட்டி விமானத்தை கூட ஏற்றி இடமாற்ற முடியும். அதனால்தான் அதன் மூக்கு வீங்கி இருக்கிறது. பெலுகா என்பது வெள்ளை நிற திமிங்கலம் ஆகும். இது நீருக்குள் தங்கு தடையின்றி (அதாங்க மேலே படித்த டிராக்) வேகமாக செல்வதை வைத்தே இந்த விமானத்தின் வடிவத்தையும் உருவாக்கி உள்ளனர்.. அதனால் அந்த திமிங்கலத்தின் பெயரையே இதற்கும் வைத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications