மோசமான காற்றின் தரம்.. சென்னை ஆலந்தூரின் "கண்ணை" மூடிய பட்டாசு புகை.. டெல்லியில் கூடிய காற்றின் மாசு
சென்னை: சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. கும்மிடிப்பூண்டி, அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் காற்று தரக் குறியீடு 200க்கு மேல் பதிவாகியுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர்.

காற்றில் மாசு: எனினும், பட்டாசுகளை அதிகளவில் வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, காற்று மாசு காரணமாக குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்... தீபாவளி என்றாலே, காற்றில் மாசு படிவது என்பது தொடர்கதையாகிவிட்டது.. பெரும்பாலும் தலைநகர் டெல்லியில்தான் இப்படியொரு பிரச்சனை ஏற்படுகிறது.. இதனால், சுவாச பிரச்சனை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு அம்மக்கள் ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில வருடங்களாகவே, காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசும் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. பெரும்பாலும், பட்டாசு வெடிப்பதற்கு டெல்லி அரசு தடைகளை விதித்தே வருகிறது. இந்த முறையும் பட்டாசு விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை: ஏற்கனவே டெல்லியில் மாசு படர்ந்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்றைய தினமே மாசு அளவு அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.. காற்றின் தரம் மிகவும் மோசமாக பதிவாகியிருக்கிறதாம்.. இன்று கூடுதலாக காற்றின் தரம் மோசமடையலாம் என்கிறார்கள்..
பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. "மோசமானது" என்றால் (AQI 201-300), "மிகவும் மோசமானது" என்றால் (301-400), "கடுமையானது" என்றால் (401-450), "கடுமையாகத் தீவிரமானது" என்றால் (450க்கு மேல்) என்பது காற்றின் தரத்திதன் அளவுகோலாகும்.
காற்றின் தரம்: அந்தவகையில், காற்றின் தரம் இன்றும், நாளையும் மிகவும் மோசமாக அதாவது AQI 300 முதல் 400 வரை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் ஏற்கன கணித்திருக்கும் நிலையில், பட்டாசு வெடிப்பதற்கான தடை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பட்டாசுகளுக்குப் பதிலாக தீபங்களை ஏற்றி கொண்டாடுங்கள் என்று டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையை பொறுத்தவரை, தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகரிக்கும் நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நேற்றைய தினமே சென்னையில் அதிகளவு காற்றுமாசு தரக்குறியீடு பதிவாகிவிட்டது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல் படி சென்னை மணலியில் அதிகமாக காற்றின் தரக் குறியீடு 229 என்றும், வேளச்சேரி இன்னும் பிற பகுதிகளில் காற்றின் தரம் 100க்கு குறைவாக இருந்தன. எனினும், இந்த இளவு இன்று பட்டாசு வெடிப்பின் புகை காரணமாக காற்றின் தரம் குறையலாம் என்றும் கூறப்பட்டது.
அதிகரித்த அளவு: இந்நிலையில், இன்றைய தினம் சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காற்று தரக்குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. கும்மிடிப்பூண்டி, அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் காற்று தரக் குறியீடு 200க்கு மேல் பதிவாகியுள்ளது. நாளை இந்த அளவு கூடுதலாகும் என்றும் அஞ்சப்படுகிறது.
காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 254, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது.கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications