விடிய விடிய நடந்த தீவிர விசாரணை ஓவர்.. சென்னை கேளிக்கை விடுதி விபத்து! கிளப் உரிமையாளருக்கு ஜாமீன்
சென்னை: ஆழ்வார்பேட்டை உள்ள கேளிக்கை விடுதி மேற்கூரை விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் அசோக்குமார் சரணடைந்த நிலையில், அவர் 6 மணி நேர விசாரணைக்குப் பிறகு ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் சென்னையின் ஆழ்வார்பேட்டையில் பல கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகிறது. அப்படி செயின்ட் மேரீஸ் சாலையில் செயல்பட்டு வரும பிரபல பப் ஒன்றில் கடந்த வியாழக்கிழமை மிக மோசமான விபத்து ஏற்பட்டது.

வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த பப் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்த போது உள்ளே சுமார் 20 முதல் 22 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இடிந்து விழுந்து விபத்து: விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளே சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஈடுபாடுகளில் சிக்கிய மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் மூன்று பேரும் சடலமாகவே மீட்டனர். உயிரிழந்த மூன்று பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதும் இருவர் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் தமிழகத்தைச் சைக்ளோன்ராஜ் (45), மணிப்பூரைச் சேர்ந்த இவுரவ் மேக்ஸ் (24). லாலி (22) என்று அடையாளம் காணப்பட்டது. இவர்கள் மூன்று பேருமே அந்த தனியார் கேளிக்கை விடுதியில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அபிராமிபுரம் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தினர். உரிய உரிமம் பெற்றே அந்த கேளிக்கை விடுதி இயங்கியது தெரிய வந்தது.
போலீஸ் நடவடிக்கை: கேளிக்கை விடுதியின் ஒரு பகுதி மட்டுமே இடிந்து விழுந்தாலேயே பாதிப்பு குறைவாக இருந்துள்ளது. ஒட்டுமொத்த மேற்கூரையும் இடிந்து விழுந்திருந்தால் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்றே கூறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கேளிக்கை விடுதி மேலாளர் சதீஷ் உட்பட 12 பேர் மீது வழக்கு செய்துள்ள போலீசார், அவர்களில் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
முதலில் அருகே மெட்ரோ சுரங்க பணிகள் நடந்து வந்த நிலையில், இதனால் ஏற்பட்ட அதிர்வுகளால் விபத்து நடந்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இது குறித்து சென்னை மெட்ரோ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை நடத்தினர். அதன் பின்னரே விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது.
உரிமையாளர்: விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே இந்த கிளப் உரிமையாளர் தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இரண்டு நாட்கள் கழித்து அந்த நபர் நேற்றிரவு போலீஸில் சரணடைந்து இருக்கிறார். கிளப் உரிமையாளர் அசோக்குமார் நேற்றிரவு போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.. அப்போது அவர் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக மெட்ரோ பணிகள் குறித்து ஏற்கனவே புகார் அளித்து இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
சுமார் 6 மணி நேரம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், எழுத்துபூர்வ விளக்கங்களையும் அவரிடம் பெற்றுள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் ஜாமீனில் விடுத்துள்ளனர்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications