"3" சினிமா தனுஷ் மாதிரி அப்படியே.. காதில் யாரோ கூப்பிடுறாங்கம்மா.. சென்னை அம்பத்தூரில் ரோஷனின் நிலை?
சென்னை: தனிமையில் இருந்த ரோஷன் ஏன் இத்தகைய முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை. திருப்பதிக்கு சென்ற பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அவர் தனிமையில் இருந்தார். கடைசியில் ரோஷன் எடுத்த முடிவால் குடும்பம் அதிர்ச்சியில் குலைந்து விட்டனர். என்ன நடந்தது சென்னை அம்பத்தூர் ரோஷன் வீட்டில்?
சென்னை நொளம்பூர் அருகே மேற்கு முகப்பேர் திருவள்ளூர் நகரை சேர்ந்த 24 வயது ரோஷன் நாராயணன், அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று அவரது குடும்பம் திருப்பதிக்கு சென்றிருந்தது. அப்போது ரோஷன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பிறகு நேற்று காலை, திருப்பதிக்கு சென்றவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள்..
அம்பத்தூரில் தனிமையில் ரோஷன்
வீட்டின் கதவை தட்டியுள்ளனர், ஆனால் ரோஷன் கதவை திறக்கவில்லை.. நீண்ட நேரம் கதவைத் தட்டிய பிறகு, பதற்றமான பெற்றோர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே ரோஷன் தூக்கிட்டு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்கள். உடனே நொளம்பூர் போலீசுக்கு தகவல் தந்தனர்.
விரைந்து வந்த போலீசார் ரோஷனின் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. பிறகு ரோஷனின் மரணம் குறித்த விசாரணயை ஆரம்பித்தனர்.. ரோஷன் தங்கியிருந்த ரூமிலும் சோதனை நடத்தினர்.. அப்போது ரோஷன் எழுதிய கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
யாரோ என்னை கூப்பிடறாங்க.
அந்த கடிதத்தில், "யாரோ என்னை கூப்பிடறாங்க.. அவர்கள் என்னை கூப்பிடுவது போல சத்தம் என் காதுக்குள் கேட்டுக்கிட்டே இருக்கு.. என் சகோதரரிடம் சண்டை போட்டதால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அம்மா - அப்பா, நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள்" என எழுதியிருந்தார்..
இதையடுத்து, ரோஷனின் செல்போன் மற்றும் பிற பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை முன்னெடுத்துள்ளனர். ரோஷன் திடீரென தற்கொலை செய்தது அம்பத்தூர் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் ரோஷனின் குடும்பம் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை..
3 படத்தில் தனுஷூ வரும் பிரச்சனை
யாரோ கூப்பிடுவது போல தொடர்ந்து காதில் சத்தம் கேட்டு வரவும், ஒருவிதமான மன அழுத்தத்துக்கு ரோஷன் ஆளானதாக தெரிகிறது..
காதுக்குள் யாரோ பேசுவது, கூப்பிடுவது போன்ற உணர்வு "அலைச்சல் செவி நோய்" அதாவது Tinnitus என்பார்கள்.. 3 படத்தில் இதுபோன்ற பாதிப்புக்குதான் தனுஷ் ஆளாகுவார்..
யாரோ கூப்பிடுவது போன்ற சத்தம், வெளியிலிருந்து வருவதில்லை.. காதுக்குள்ளேயேதான் கேட்கும்.. செவிச்சுருள் பாதிப்பு, அதிக சத்தம், ரத்த அழுத்தம், சில மருந்துகள், நீண்ட நாள் மன அழுத்தம் போன்ற காரணங்களால் இதுபோன்ற பாதிப்பு ஏற்படலாம்.. இதனால் அதிக கவலை, தூக்கம் குறைவு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் வரக்கூடும்..
அதிக மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் இருந்தால், அரிதாக இது போல காதுக்குள் யாரோ பேசுவது போல சத்தம் கேட்கும்.. அப்படியிருந்தால் உடனே டாக்டரை சந்தித்துவிட வேண்டும்..
தொடர்ந்து மன அழுத்தத்துக்கு ஆளாக்கிவிடாமல், தனிமையிலும் தள்ளிவிடாமல், பாதிக்கப்பட்டவர்களை சுற்றி நண்பர்கள், குடும்பத்தினரின் ஆதரவு எந்நேரமும் இருப்பது நல்லது
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications