சென்னையில் விழும் "அடி".. கிராமப்புறத்தில் இன்னும் 2 மாசத்துக்கு நிலைமை சுமார்தான்.. டாஸ்மாக் அதிரடி
சென்னை: அடுத்த 2 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் நிலையில், இந்த தீபாவளிக்கு 2 நாள் வருமானமாக, மொத்தம் ரூ.467.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

டாஸ்மாக் வருமானம்: அதாவது, தீபாவளிக்கு முன்தினம் 11ம் தேதி அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.52.73 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.48.12 கோடி, கோவையில் ரூ.40.20 கோடி, திருச்சியில் ரூ.40.02 கோடி, சேலத்தில் ரூ.39.78 கோடிக்கு மது விற்பனையானதாகவும், தீபாவளி தினத்தில், திருச்சியில் ரூ.55.60 கோடி, சென்னையில் ரூ.52.98 கோடி, மதுரையில் ரூ.511.97 கோடி, சேலத்தில் ரூ.46.62 கோடி, கோவையில் ரூ.39.61 கோடிக்கு மது விற்பனையானதாகவும் தகவல் வெளியானது.. இதனை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், சாடியும் வருகின்றன.
சபரிமலை சீசன்: இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.. வழக்கமாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு வருடமும், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்கப்பட்டுள்ளது.. இப்போது கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால், பெரும்பாலானோர் சபரிமலை மாலை அணிந்துள்ளனர்.. கடந்த சில ஆண்டுகளாகவே, கொரோனா தொற்று காரணமாக, சபரிமலைக்கு செல்ல நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன.. ஆனால், இப்போது, தளர்வுகள் உள்ளதால், இந்த முறை சற்று அதிகமான எண்ணிக்கையிலேயே, பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வாய்ப்புள்ளது..
சுத்த விரதம்: அந்தவகையில், மாலை அணித்து விரதமும் இருக்க தொடங்கிவிட்டனர். இவர்கள் தொடர்ந்து 41 நாட்கள் சுத்த விரதத்திலும் ஈடுபட போகிறார்கள். இதன் காரணமாக அடுத்த 2 மாதங்களுக்கு மது விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சொல்லும்போது, கார்த்திகை மாதங்களில் இப்படி, விற்பனை குறைவது வழக்கமான ஒன்றுதான்.. இதையடுத்து, மது விற்பனை 10 முதல் 20 சதவீதம் வரை குறையும் என தெரிகிறது.
சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் அதிகளவில் மாலை போடுவோர் இருக்க மாட்டார்கள், ஆனால், கிராமப்புறங்களில் அதிகமானோர் ஐயப்பனுக்கு மாலை போடுவார்கள் என்பதால், கிராமப்புறங்களில் அதிகளவில் விற்பனை சரியலாம்" என்றனர்.
-
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications