சென்னையில் மசாஜ் சென்டர் விபச்சாரம்.. போலீஸ் வந்ததுமே திருதிருனு விழித்த பிரேமா.. ஆடிப்போன அண்ணாநகர்
சென்னை: முறைகேடாக செயல்பட்டு வரும், பியூட்டி பார்லர்கள், ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், சென்னையில் ஒரு மசாஜ் சென்டரில் மீண்டும் ஒரு அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே மசாஜ் சென்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.. ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்களில் விபச்சாரங்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ் புதுப்பிக்காமல், நடத்தப்படும் ஸ்பாக்களில் இதுபோன்ற விபச்சாரங்கள் அதிகரித்தபடி உள்ளன.

வேலை வாய்ப்புகள்: அதுமட்டுமல்ல, கிராமப்புறங்களிலிருந்து வேலை தேடி நகர்ப்புறத்துக்கு வரும் இளபெண்கள். சினிமா, டிவி சீரியல்களில் வாய்ப்பு தருவதாக சொன்னதை கேட்டு ஏமாற்ற பெண்கள், குடும்ப சூழ்நிலை, வறுமை போன்ற பல்வேறு காரணங்களால் இதுபோன்ற மசாஜ் சென்டர்களில் வந்து சிக்கி கொள்கிறார்கள். இதனால் பல வெளிமாநில பெண்களும் அடக்கம்.
எனவேதான், தமிழ்நாடு முழுவதும் போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு, சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அவர்கள் அனைவரையுமே தயவுதாட்சண்யம் பார்க்காமல் கைது செய்து வருகிறார்கள். அத்துடன், ஆசைவார்த்தைகளுக்கு ஏமாந்துபோய், மூளை சலவை செய்யப்பட்டு, சொந்த ஊர் திரும்பி செல்ல முடியாமல் தவித்து வரும், எத்தனையோ அப்பாவி பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டும் வருகிறார்கள்.
அப்பாவி பெண்கள்: இந்நிலையில் சென்னையில் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திலிருந்தும் 3 பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் செயல்பட்டு வந்தது. இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால், அதிரடியாக அந்த மசாஜ் சென்டருக்குள் நுழையாமல், மப்டியில் போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.. அப்போதுதான், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. இதற்கு பிறகுதான், போலீசார் உள்ளே நுழைந்து, பிரேமா என்ற 30 வயது பெண்ணை கைது செய்தனர்.
ரகசிய தகவல்: இது தொடர்பாக காவல்துறை செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.. அதில், "சென்னை பெருநகர காவல், அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் ஜனவரி 21ம் தேதி (நேற்று) அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரை கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேற்படி ஸ்பா மற்றும் மசாஜ் சென்டரின் உரிமையாளர் திருவொற்றியூர், திருச்சினாங்குப்பத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரின் மனைவி பிரேமா (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
மகளிர் காப்பகம்: கைது செய்யப்பட்ட பிரேமா விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 3 பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications