Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் துயரம்.. அரசு பேருந்து ஏறி இறங்கி ஐடி ஊழியர் துடிதுடித்து பலி.. விபத்துக்கு ஷாக் காரணம்!

சென்னை அண்ணா சாலையில் அரசு பேருந்து ஏறி இறங்கியதில் பெண் ஐடி ஊழியர் உயிரிழந்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது திடீரென விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

சென்னையில் மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் உரசியதன் காரணமாக பின்னால் அமர்ந்து சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியதில் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வந்தவர் பிரியங்கா. இவருக்கு வயது 22. பிரியங்கா சென்னை கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் பைக்கில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மாநகர பேருந்து

மாநகர பேருந்து

அவர்களது இருசக்கர வாகனம் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர் திசையில் அடையாளம் தெரியாத மற்றோரு இருசக்கர வாகனம் வேகமாக வந்து உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறியது. இதில் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிரியங்கா படுகாயம் அடைந்து துடிதுடித்தார்.

அண்ணாசதுக்கம் போலீஸ்

அண்ணாசதுக்கம் போலீஸ்

அதேநேரம் அதிர்ஷ்டவசமாக பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர். அதேநேரம் படுகாயமடைந்த பிரியங்காவை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பதிவெண் இல்லாத வாகனம்

பதிவெண் இல்லாத வாகனம்

இவ்விபத்தை ஏற்படுத்த பதிவு எண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மோசமான விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடிவருகின்றனர். சென்னையில் அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருவரின் அவசரமான மற்றும் அலட்சியமான வேகம் மற்றொருவரின் உயிரையே பறித்துள்ளது. சாலையில் செல்வோர் கவனமாகவும் பொறுமையாக செல்வது அவர்களுக்கு மட்டுமல்ல அந்த சாலையில் செல்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

கட்டிட விபத்து

கட்டிட விபத்து

அண்மையில் தான் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையின் சுரங்கப் பாதைக்கு அருகில் இருந்த பயன்படாத கட்டிடத்தை இடிக்கும் பணியின் போது விபத்து ஏற்பட்டது- கட்டிடத்தை இடித்துக்கொண்டிருந்த போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் பிரியா என்ற பெண் மீது கட்டிட இடுபாடுகள் விழுந்தன. இதில் படுகாயம் அடைந்த அவரை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பிரியா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அந்த சம்பவம் நடந்த ஒரு வாரம் கூடஆகவில்லை அதற்குள் இன்னொரு சோக சம்பவம் ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+