Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியார் தமிழரசி போட்ட மாஸ்டர் பிளான்.. மருமகன்னுகூட பார்க்கல.. சென்னை அசோக் நகரை அலறவிட்ட குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அசோக்நகர் இளைஞர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.. காதல் திருமணம் செய்த இளைஞரை, அடித்து கொன்றது யார் என்ற விசாரணையை போலீசார் நடத்தினார்கள். இதனிடையே இளைஞரின் குடும்பத்தினரும் தங்களது புகார் மனுவை அசோக் நகர் போலீஸுக்கு தந்தார்கள்.. இதற்கு பிறகே விசாரணை துரிதமாகி, உண்மை குற்றவாளிகள் அகப்பட்டுள்ளனர்.

சென்னை அசோக்நகரை சேர்ந்தவர் கலையரசன்.. 23 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த தமிழரசி என்ற பெண்ணை காதலித்தார்.. ஒருகட்டத்தில் அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்.. இந்த தம்பதிக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

Chennai ashok nagar mother in law

ஆனால், திருமணமாகி மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை துவங்கிய தம்பதி இருவருக்கும் மெல்ல மெல்ல கருத்து வேறுபாடுகள் வெடித்தன.. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.. கடந்த ஒன்றரை வருடங்களாகவே இருவருமே பிரிந்து வாழ துவங்கினர்..

பிரிந்து சென்ற தம்பதி

தம்பதி பிரிந்தாலும், குடும்ப பிரச்சனை ஓயவில்லை.. கடந்த வருடம் கலையரசன், தமிழரசியின் சகோதரர் 20 வயது சக்திவேலை கடுமையாக தாக்கியிருக்கிறார்.. இதனால், கலையரசனை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று, மற்றொரு சகோதரர் 18 வயது சஞ்சய் முடிவு செய்தார்.. இதற்கான நேரம் பார்த்து, கலையரசனை பழிவாங்க காத்திருந்தார்..

அதன்படி, கடந்த 15-ந்தேதி, கலையரசன் அசோக்நகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 18 வயது சஞ்சய், தன்னுடைய நண்பர்கள் சக்திவேல் , சுனில்குமார் ஆகியோருடன் அங்கு வந்தார்.. கலையரசனை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.. இந்த அரிவாள் வெட்டில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த கலையரசனை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. உடனடியாக போலீசுக்கும் தகவல் தந்தார்கள்..

கொலை முயற்சி வழக்கு

தகவலறிந்து வந்த அசோக்நகர் போலீசார், கொலைமுயற்சி வழக்கின் கீழ் சஞ்சய், சக்திவேல், சுனில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்... இதனிடையே தீவிர சிகிச்சை தந்தும் கலையரசனை காப்பாற்ற முடியவில்லை.. மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.. எனவே, கைதான 3 பேர் மீதும், கொலை முயற்சி வழக்கானது, கொலை வழக்காக பதிவானது.

இதையடுத்து, கலையரசனின் தாயார், தன்னுடைய மகனின் படுகொலைக்கு, மருமகள் தமிழரசியும், அவரது நண்பர் சரவணன் மற்றும் தமிழரசியின் குடும்பத்தினரும்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டி அசோக்நகர் போலீசில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் விசாரணை துரிதமானது..

சந்தேகப்பட்ட அம்மா

கலையரசனின் அம்மா சந்தேகப்பட்டதுபோலவே, தமிழரசியும், அவரது நண்பர் சரவணனும் என்பது தெரியவந்தது. ஆனால், அதற்குள் தமிழரசியும், சரவணனும் தலைமறைவாகிவிட்டனர்.. பிறகு தமிழரசி கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோதுதான், தமிழரசியின் அம்மா சந்தியா (65) என்பவருக்கும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதேபோல, இந்த கொலையில் தொடர்புள்ள சஞ்சய் என்ற உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆக மொத்தம், கலையரசன் கொலையில், மனைவி தமிழரசி, மைத்துனர்கள் சஞ்சய், சக்திவேல், சுனில் குமார் ஆகியோர் ஏற்கனவே கைதாகியிருக்கிறார்கள்..

இந்நிலையில், தலைமறைவாக இருந்த மாமியார் சந்தியாவும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.. அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. ஒருவரை தீர்த்துக்கட்ட, ஒட்டுமொத்த குடும்பமே சேர்ந்து நடத்திய திட்டம் அம்பலமாகி, அசோக்நகர் பகுதியையே நடுங்க வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+