சென்னை ஆட்டோக்களுக்கு திடீரென போன முக்கிய உத்தரவு.. மக்களுக்கு குட் நியூஸ்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால்.. மக்களின் வசதியை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை ஆட்டோக்கள் பர்மிட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
நேற்று , 30.01.2024 முதல் தென் மாவட்டங்களுக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 பேருந்துகள் இயக்கப்பபட்டு வருகிறது.

கடந்த 30.12.2023 அன்று கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறந்து வைக்கப்பட்டது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வாக, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை பொது மக்களின் வசதிக்கேற்ப, நேற்று (30.01.2024) முதல் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கிளாம்பாக்கத்தில் இருந்து 710 (80%) அரசுப் பேருந்துகள் மற்றும் மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து 160 (20%) அரசுப் பேருந்துகள் என ஆக மொத்தம் 870 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம் நேற்று (30.01.2024) மாதவரம் பேருந்து முனையத்தில், தென் மாவட்டங்களுக்கான பேருந்து இயக்கத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள். மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-18, சேலம்-17. விருத்தாசலம்-6, கள்ளக்குறிச்சி-16, விழுப்புரம்-16. கும்பகோணம்-14, சிதம்பரம்-5. நெய்வேலி-11. கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-5, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-10. திருவண்ணாமலை (வழி) செஞ்சி-22, போளூர் & வந்தவாசி-20 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ஆய்வு: மேலும், நேற்று (30.01.2024) போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தினை ஆய்வு மேற்கொண்டு, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை கேட்டறிந்தார்கள். இவ்வாய்வின் போது, விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ராஜ்மோகன், முதன்மை நிர்வாக அலுவலர் ஜெ.பார்த்தீபன் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.
நேற்று முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து செங்கல்பட்டு. திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் திருச்சி-118. சேலம்-66. விருத்தாசலம்-30. கள்ளக்குறிச்சி-50, விழுப்புரம்-59. கும்பகோணம்-52, சிதம்பரம்-21. நெய்வேலி -46, கடலூர் (வழி) புதுச்சேரி, திண்டிவனம்-32, புதுச்சேரி (வழி) திண்டிவனம்-35, திருவண்ணாமலை (வழி) செஞ்சி-125, போளூர்-30, வந்தவாசி-46 உள்ளிட்ட வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அறிவுறுத்தல்: பொது மக்களின் வசதிக்கேற்ப, தென் மாவட்டங்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வரும் பேருந்துகள் மட்டும் தாம்பரம் வரை இயக்கப்பட்டு, பயணியரை இறக்கிவிட்டதும். கிளாம்பாக்கத்திற்கு திரும்பி, அங்கிருந்து பயணியரை ஏற்றிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிளாம்பாக்கம் மா.போ.கழக பேருந்து நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் வெளியூர் பேருந்து நிலையம் வந்து, செல்லும் பயணிகளை, மா.போ.கழக சிற்றூந்துகளில் கட்டணமில்லாமல் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஆட்டோ வசதி: இந்த நிலையில் கூடுதலாக .. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வருவதால்.. மக்களின் வசதியை பூர்த்தி செய்யும் விதமாக சென்னை ஆட்டோக்கள் பர்மிட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி சென்னை ஆட்டோக்களின் பர்மிட்களை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) எல்லை வரை நீட்டித்தது போக்குவரத்து துறை. இதன்மூலம், சென்னை பர்மிட் ஆட்டோக்களை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், ராணிப்பேட்டை வரை இயக்கலாம். எல்லை தாண்டியதாக இனி அபராதம் விதிக்கப்படாது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications