ஓய்வில்லை.. எத்தனை சுமை வந்தாலும் கவலை இல்லை.. இளைஞர்களின் சுமை தாங்கிக் கல் திருவல்லிக்கேணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு வேலைக்கு ஓடிவ ருபவர்களை வரவேற்கும் முதல் இடம் என்றால் அது சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தான். இந்த மேன்சன்கள் தான் பலரது கனவுகளையும், நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கிறது.

கல்லூரி படிப்பை முடித்து பட்டதாரியாக வேலை தேடி சென்னை வரும் மக்களை வரவேற்கும் முதல் இடம் சென்றால் சென்னை திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தான்.

இரண்டு மாத அட்வான்ஸ் 5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் இருந்தாலே உங்களுக்கு திருவல்லிக்கேணி மேன்சனில் ரூம் கிடைத்துவிடும். மற்றபடி வாடகைக்கு வீடு பார்ப்பது என்பது ஏழை எளிய பேச்சுலர்களுக்கு இயலாத காரியம்.

பேச்சுலர் பொறுப்புகள்

பேச்சுலர் பொறுப்புகள்

முன்பின் அறிமுகம் இல்லாத நான்கு பேர், ஒரே ரூமில் தாங்கி, வேலை தேடுவார்கள். அப்படி நண்பர்கள் ஆனவர்கள் தான் சென்னையில் பலர். அவர்களுக்கு கிடைக்கும் முதல் வேலை என்றால் 10 ஆயிரமோ, எட்டாயிரமோ சம்பளமாக கிடைக்கும். அதை வைத்து சாப்பாடு, ரூம் வாடகை, கல்விக்கடன், அப்பா, அம்மாவிற்கு பணம் என செலவு செய்ய வேண்டியதிருக்கும். இந்த சொற்ப சம்பளத்தில் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்புடனும், அக்கா திருமணத்திற்கு வாங்கி கடனை அடைக்கும் பொறுப்புடனும் பல இளைஞர்கள் சென்னை மேன்சனில் வாழ்ந்து வருகிறார்கள்.

வென்றவர்கள்

வென்றவர்கள்

அந்த வகையில் சென்னை பேச்சுலர் இளைஞர்கள் பெற்றோர்களை பிரிந்து, சொந்தங்களை மறந்து, கிடைந்த நண்பர்களுடன் பத்துக்கு பத்து என்ற திருவல்லிக்கேணி மேன்சன்களில் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள் அந்த மேன்சனகள் தான் பல இளைஞர்களின் எதிர்கால கனவுகளை சுமந்து கொண்டு இருக்கிறது. சென்னையை புரிந்து கொண்டு போராடி வென்ற பலர் இங்கிருந்து தான் வாழ்கையை ஆரம்பித்தவர்கள். இன்று லட்சங்களில் சம்பளம் வாங்கிகொண்டும், கோடிகளில் சம்பளம் வாங்கிகொண்டு இருப்பவர்கள் பலர், ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி,சேப்பாக்கம் மேன்சன்களில் இருந்து சென்றவர்கள் தான்.

மற்ற துறை இளைஞர்கள்

மற்ற துறை இளைஞர்கள்

புதிதாக வேலைக்கு சேர்ந்து சாப்ட்டேர் துறையில் சொற்ப சம்பளத்தில் கிடைத்த இளைஞர்கள் அடுத்த இரண்டு வருடங்களில் 30k. 40k, என மாறிவிடுவார்கள். அதேநேரம் மற்ற துறையில்வேலைக்கு சேர்ந்தவர்கள் ஆயிரம், 2 ஆயிரம் ஊதிய உயர்வை தாண்டுவதே கடினமாக இருக்கும்.இதனால் 15 ஆயிரத்தை தொட்டு பார்ப்பதே கடினமாக இருக்கும். அதேநேரம் 5 வருடங்களுக்கு பின்பு பார்த்தால் ஒரு நல்ல வளர்ச்சியை இரண்டு தரப்புமே எட்டியிருப்பார்கள்

முரட்டு சிங்கிள்கள்

முரட்டு சிங்கிள்கள்

யாரையுமே தெரியாமல், சென்னைக்கு வந்த பலருக்கு அந்த மேன்சகள் பல நண்பர்களையும், புதிய உறவுகளையயும் பல நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்து வருகிறது. யாரையும் தெரியாத பலருக்கு முகவரிகளை கொடுத்த இடம் என்றால் அது திருவல்லிக்கேணி மேன்சன்கள் தான். அன்று வாய்ப்பு தேடி தெருத்தெருவாக அலைந்த போது இருந்த சந்தோஷங்கள், அப்போது கிடைத்த நட்புகள், உறவுகள், இப்போது பலருக்கு இல்லை என்பதே எதார்த்தம். அந்த மேன்சகளின் ஒவ்வொரு அறைகளுமே பலரது கனவுகளையும், நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கிறது. இன்னும் பல முரட்டு சிங்கிள்களுக்கு மேன்சன்கள்தான் முகவரியாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+