சென்டரல் டூ தாம்பரம் வெறும் 14 நிமிடங்களில்.. மிரண்டு நிற்கும் சென்னைவாசிகள்.. இது எப்படி சாத்தியம்
சென்னை: ePlane என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் நகரத்தின் கூட்ட நெரிசலில் இருந்து தப்பி ஈஸியாக பயணிக்கக்கூடிய பறக்கும் மின்சார டாக்ஸிக்களை விரைவில் கொண்டு வர உள்ளது.
இந்தியாவில் எல்லா நகரங்களிலும் டிராபிக் என்பது முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. முதற்கட்ட நகரங்களில் மட்டும் இருந்த டிராபிக் பிரச்சினை இப்போது இரண்டாம் கட்ட நகரங்களிலும் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது.

பறக்கும் டாக்ஸி: இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த ePlane என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பறக்கும் மின்சார டாக்ஸின் மாதிரி அதாவது prototypeஐ உருவாக்க உள்ளது. அது பயன்படுத்தக்கூடிய அளவுக்கு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. நகர்ப்புறங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை இவை பெரியளவில் குறைக்கும் என்றும் நம்புகிறார்கள்.
சென்னை ஐஐடி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம், முதற்கட்டமாக 2-6 கிலோ எடையைச் சுமந்து செல்லும் தனது ட்ரோன்களை வரும் மாதங்களில் உருவாக்க உள்ளனர். அதை அதிகளவில் தயாரித்து விற்பனை செய்யவும் இந்த ஈ பிளைன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செம பிளான்: அதன் பிறகு அடுத்த கட்டமாக நகருள் எளிமையாகப் பறந்தே செல்லும் வகையில் eVTOL (எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்ஆஃப் மற்றும் லேண்டிங்) விமானத்தில் முழுமையாகக் கவனம் செலுத்த உள்ளதாக இந்த ePlane நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன சத்ய சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்த ஏர் டாக்ஸி அப்படியே இருக்கும் இடத்தில் இருந்து மேல்நோக்கி பறக்கும், தரையிறங்கும் போதும் மேலே இருந்து அப்படியே இறங்கும் என்பதால் இதை ஆப்ரேட் செய்யப் பெரியளவில் இடம் தேவையில்லை.
இந்த விமானத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், முதலில் இது மூன்று அல்லது நான்கு இருக்கைகள் கொண்ட மினி விமானமாக இது இருக்கும் என்றும் சத்ய சக்ரவர்த்தி கூறினார். இதை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்து என்ன: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சான்றிதழ் பெறக்கூடிய ப்ரோடோடைப்பை
உருவாக்க உள்ளோம். அதன் பிறகு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் சான்றிதழைப் பெற இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும்" என்றா்.
நகரங்களில் உள்ள சாலைகளில் வாகன நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைக் குறைத்து நகரத்திற்குள் பயணிப்பதை எளிமையாக்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கமாகும்.. நாம் வாகனங்கள் மூலம் செல்ல 60 நிமிடங்கள் ஆகும் இடத்தை இந்த ePlane மூலம் வெறும் 14 நிமிடங்களில் அடையலாம். அதாவது சென்னை டூ தாம்பரம் தூரத்தை 14 நிமிடங்களில் சென்றடைய முடியும்.

முதலில் ட்ரோன்கள்: முன்பே குறிப்பிட்டது போல இந்த நிறுவனம் வரும் காலத்திற்குத் தெளிவான பிளைனை வைத்துள்ளது. எடுத்த உடன் ஏர் டாக்ஸியை உருவாக்காமல், முதற்கட்டமாக ட்ரோன்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன, அவை இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.. முதலில் ஒரு வகை ட்ரோன்களை மட்டுமே சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து பல புதிய வகை ட்ரோன்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த ட்ரோன்கள 2-6 கிலோ முதல் 50 கிலோ வரை எடுத்துச் செல்லக் கூடியதாக இருக்கும். அதிகபட்சமாக 40-60 கிமீ வேகத்தில் பறக்கும் திறனையும் இது கொண்டிருக்கும்.
மற்றொரு நிறுவனம்: அதேபோல மற்றொரு புறம் இன்டர்குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனத்துடன் சேர்ந்து நாட்டின் முதல் மின்சார விமான டாக்ஸி 2026இல் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதில் நாம் ஒரு மணி நேரம் பயணிக்கும் தூரத்தை வெறும் 7 நிமிடங்களில் சென்றடையலாம். இந்த இன்டர்குளோப் வெறு யாரும் இல்லை நாட்டின் பிரபல விமான நிறுவனமான இண்டிகோவின் தாய் நிறுவனமாகும்.
இந்த இரு நிறுவனங்களை தவிர வேறு சில நிறுவனங்களும் மின்சார பறக்கும் டாக்ஸிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், யார் முதலில் அவற்றை அறிமுகப்படுத்துவார்கள் என்பதில் போட்டி கடைசி வரை தொடர தான் போகிறது.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம்












Click it and Unblock the Notifications